in

இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது

இலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய தேர் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது

இலங்கை யாழ்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய திருவிழாவின் 24 ஆம் நாளான தேர் திருவிழா நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

இலங்கை யாழ்பாணத்தில் அமைந்துள்ள நல்லூர் கந்தசாமி ஆலய திருவிழா கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி துவங்கியது. 24 ஆம் நாளான  தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மூல மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றது . அதனை தொடர்ந்து வசந்தமண்டப பூஜைகள் இடம்பெற்றுஇ முருகப் பெருமான் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரில் எழுந்தருளி வீதி உலா வந்த நல்லூர் கந்தனை ஆயிரகணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தேர் திருவிழாவைக் காண இலங்கை இமற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து இருந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தும்இ நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி நல்லூர் கந்த பெருமானை வழிபட்டனர் . 2ஆம்தேதி தீர்த்தத் திருவிழாவும் நடை பெற இருக்கிறது.

What do you think?

நத்தத்தில் 50 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த முன்னாள் பள்ளி மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு

பழனியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் சிங்கம் புலி,பசு ,மயில் சத்ரபதி சிவாஜி உருவத்தில் உள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள்