மஞ்சள் காப்பில் ஸ்ரீவரலெட்சுமி அலங்காரத்தில் ஸ்ரீமகா மாரியம்மன்
காரைக்கால் நகரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய 45ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு திருவிழாவின் 07ம் நாள் இன்று மஞ்சள் காப்பில் ஸ்ரீவரலெட்சுமி அலங்காரத்தில் ஸ்ரீமகா மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் கடைதெருவில் அமைந்துள்ளது ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயம். இவ்வாலயத்தின் 45ம் ஆண்டு தமிழ்புத்தாண்டு திருவிழா கடந்த 13ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது.விழாவின் 07ம் நாளான இன்று ஸ்ரீ மகாமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதில் பல்வேறு திரவிய பொடிகளாலும் பால், தயிர், சநதனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷோகமும் அதனைத் தொடர்ந்து மஞ்சள் காப்பில் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீவரலெட்சுமி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.