in

மதுரையில் ஸ்ரீ மகா பெரியவா ஆராதனை விழா

மதுரையில் ஸ்ரீ மகா பெரியவா ஆராதனை விழா

 

மகா பெரியவா, உம்மாச்சி தாத்தா என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படுகிற முக்தி அடைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் ஆராதனை விழா மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பின் சார்பில், எஸ்.எஸ். காலனி, டிசம்பர் 25ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைப்பெற்றது.

இன்று நடைப்பெற்ற மகா பெரியவர் ஆராதனை வைபவத்தை முன்னிட்டு, காலை 9 மணிக்கு ‘காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர்’ விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு திருமஞ்சனத்திரவியப் பொடி,. மஞ்சள் பொடி, பஞ்சகவ்யம், பால், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், திருநீறு, சந்தன‌ சங்கு நீர் உள்ளிட்ட அபிஷேகம் நடைப் பெற்றது. தொடர்ந்து ருத்ரா அபிஷேகம் நடைப்பெற்றது.

இதை தொடர்ந்து வேதாச்சாரியார்களின் வேதமந்திரம்‌ முழங்க யாகம் வளர்க்கப்பட்டு தொடர்ந்து கலச புனிதநீரால் அபிஷேகம் நடைப்பெற்றது. பின்னர் விக்ரகத்துக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை செய்யப்பட்டது.

தொடர்ந்து, நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர் குழுவினரின் ‘ஆண்டாள் கல்யாணம்’, ‘நாம சங்கீர்த்தனம்’ நிகழ்ச்சியும் நடைப்பெற்றது.

இதைத் தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ‘மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம்’ நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.

What do you think?

மதுரையில் முதல்முறையாக ராக்கெட் விளையாட்டு வளாகம் தொடங்கி வைக்கப்பட்டது

ஹீரோவுக்கு பிரச்சனை..னா தெலுங்கு திரையுலகம் மொத்தமும் சப்போர்ட்…டா…. பூனம் கவுர்… கேள்வி