ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 7-ம் ஆண்டு தேர் திருவிழா கஜ வாகன வீதி உலா
ஒலக்கூர் கிராமம் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 7-ம் ஆண்டு தேர் திருவிழாவில் 3ம் நாள் நிகழ்ச்சியாக ஸ்ரீ கெஜலட்சுமி அலங்காரத்தில் கஜ வாகனத்தில் இரவு வீதி உலா சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய 7-ம் ஆண்டு தேர் திருவிழா 3ம் நாள் மூலவர் ஸ்ரீ முத்தாலம்மன் கஜலட்சுமி அலங்காரத்தில் வெள்ளி கவசத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து உற்சவர் ஸ்ரீ முத்தாலம்மன் கெஜலட்சுமி அலங்காரத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை, நட்சத்திர தீபம், பல்வேறு சத்திரங்களை கொண்டு சோடச உபச்சாரம்,மற்றும் பஞ்சமுக தீபாரதனை, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து கோயில் உட்பிரகாரம் வலம் வந்து யாக சாலையில் பூர்ணாகுஹூதி செலுத்தி பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மேலும் கெஜலட்சுமி அலங்காரத்தில் கஜ வாகனத்தில் இரவு வீதி உலா காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் உற்சவம் வரும் 26 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் நடக்கிறது.