ஸ்ரீ ஊத்துகாட்டு மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது
வானூர் வட்டம் பழைய கொஞ்சிமங்கலம் கிராமம் ஸ்ரீ ஊத்துகாட்டு மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பழைய கொஞ்சிமங்கலம் கிராமத்தில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகாகணபதி, ஸ்ரீ ஊத்துக்காட்டு மாரியம்மன், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ சிவன், ஸ்ரீ பொறையாரத்தம்மன், ஸ்ரீ காத்தவராயன் ஸ்ரீ கங்கையம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் அடங்கிய சுவாமிகளுக்கு அஷ்டபந்தன ஜீர்ணோத்தாரண கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு காலை கோ பூஜை உடன் தொடங்கியது.
தொடர்ந்து தம்பதி பூஜை இரண்டாம் கால பூஜை, நாடி சந்தானம், பிரம்மசுத்தி, நடைபெற்றன.
யாகசாலையில் வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது பின்னர் கடங்கள் புறப்பாடாகி ஆலயத்தை சுற்றி வலம் வந்து புனித நீர் கலசம் கோவில் கோபுரத்தின் மீது கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து மூலவர் ஸ்ரீ ஊத்துக்காட்டு மாரியம்மன்க்கு பால் அபிஷேகம் மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.