காரைக்கால் கோதண்டராமர் ஆலயத்தில் ஸ்ரீராம நவமி பிரம்மோற்சவம்
காரைக்கால் கோதண்டராமர் ஆலயத்தில் பிஜ தானம் எனும் நெல்லும்,பொன்னும் தானமாக தந்ததை நினைவு கூறும் வகையில் ஸ்ரீ கோதண்டராமருக்கு நிவேதேனம் செய்த நெல் மற்றும் நாணயம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது.
காரைக்கால் அடுத்த கோவில்பத்து பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஸ்ரீ கோதண்டராம சுவாமி ஆலயத்தில் பங்குனி மாத ஸ்ரீ ராமநவமி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 29ம் தேதி துவங்கியது.பிரம்மோற்சவ விழாவின் 09ம் நாளான இன்று காலை திருத்தேரில் ஸ்ரீகோதண்டராமர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீராம நவமி, ஸ்ரீராமர் அவதார நாளான இன்று மதியம் ஸ்ரீகோதண்டராமர் உள்ளிட்ட உற்சவர் சுவாமிகளுக்கு திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், தேன், பழங்கள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
ஸ்ரீராமர் அவதரித்த நாளன்று தசரத சக்ரவர்த்தி நாட்டு மக்களுக்கு பிஜ தானம் எனும் நெல்லும்,பொன்னும் தானமாக தந்ததை நினைவு கூறும் வகையில் ஸ்ரீ கோதண்டராமருக்கு நிவேதேனம் செய்த நெல் மற்றும் நாணயம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.மேலும் பக்தர்களுக்கு அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.