in ,

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ட்ரோன் மூலம் பொதுமக்கள் மீது புனித நீர்

ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ட்ரோன் மூலம் பொதுமக்கள் மீது புனித நீர்

 

புவனகிரியில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

ட்ரோன் மூலம் பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது

கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசம் இரண்டு கால யாகசாலையில் வைக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் கடங்கள் புறப்பாடாகி ஆலயத்தை சுற்றி வலம் வந்து புனித நீர் கலசம் கோவில் கோபுரத்தின் மீது கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கருடன் வட்டமிட புனித நீர் கோபுர கலசத்தின் மீது ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்று மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் ட்ரோன் மூலம் கூடியிருந்த பொது மக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கோவில் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

What do you think?

வேதாரண்யத்தில் இருந்து தண்டிக்கு தனி ரயில் இயக்க வேண்டும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் இரா. முத்தரசன் பேட்டி

ஸ்ரீ ஊத்துகாட்டு மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது