in ,

ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் திருக்கோயில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்

ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் திருக்கோயில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை சிறப்பு அலங்காரம்

 

ஆலகிராமம் அருள்மிகு ஸ்ரீ ஜனகவல்லி தாயார் சமேதா ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் திருக்கோயில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஆலகிராமம் அருள்மிகு ஸ்ரீ ஜனகவல்லி தாயார் சமேத ஸ்ரீ வைகுண்டவாச பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு திருமஞ்சன பொடி, பால், தயிர், சந்தனம், பன்னீர், உள்ளிட்ட நறுமண திரவியங்கள் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.

தொடர்ந்து மூலவர் சிறப்பு அலங்காரத்துடன் கும்பதீபம், பஞ்சமுக தீபாரதனை, கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது, இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலகிராமம் பாலாஜி ஐயர் செய்திருந்தார்.

What do you think?

 ஸ்ரீ ரங்கநாயகி சமீதா ஸ்ரீ பள்ளிகொண்டு பெருமாள் சன்னதி கருட சேவை

ஒலக்கூர் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலய ஏகப்பட்ட நவராத்திரி விழா