in

மத்திய அரசின் பட்ஜெட் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம் ஸ்ரீமதி அபராஜிமதுரையில் தா சாரங்கி பேட்டி

மத்திய அரசின் பட்ஜெட் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம் ஸ்ரீமதி அபராஜிதா சாரங்கி மதுரையில் பேட்டி

 

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்களும் கூடுதல் நிதியும் கிடைத்துள்ளது, நாடுமுழுவதும் அறிவிக்கப்பட்ட திட்டங்களால் தமிழ்நாடு அதிகளவிற்கு பயன்பெறும் இந்த பட்ஜெட்டை வைத்து தமிழக அரசு அரசியல் செய்யக்கூடாது – பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீமதி அபராஜிதா சாரங்கி மதுரையில் பேட்டி

மத்திய அரசின் பட்ஜெட் தொடர்பாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும் ஸ்ரீமதி அபராஜிதா சாரங்கி மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்துபேசினார்.

மத்திய அரசு பட்ஜெட்டில் இதுவரையும் இல்லாத அளவிற்கு சிறப்பான பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் மற்றும் அவரது குழுவினர் சிறப்பாக ஆலோசித்து வெளியிட்டுள்ளனர். இந்த பட்ஜெட்டில் வேளாண்மை , கல்வி மேம்பாடு, சிறு குறு தொழில் தொழில் முனைவோர் , வேலைவாய்ப்பு , வளர்ச்சி, உட்கட்டமைப்பு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது

மத்திய பட்ஜெட்டின் மூலமாக தமிழ்நாட்டுக்கு பல்வேறு சிறப்பு நிதிகள் கிடைத்துள்ளன 81 நிமிடங்கள் மட்டுமே பட்ஜெட் உரை வாசித்த நிலையில் அனைத்து மாநிலங்களுடைய பெயர்களையும் வாசிக்க இயலாது என்பதால் தமிழகத்திற்கு செயல்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடு குறித்து பேச இயலவில்லை

இந்த பட்ஜெட் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம் எனவும் மத்திய பட்ஜெட்டின் மூலமாக மத்திய அரசின் நிதி மூலமாக ஏராளமான இலவச வீடுகள் கட்டித் தரப்படும் எனவும் ரயில்வே துறைக்கு முந்தைய காங்கிரஸ் அரசை விட தற்போதைய பாஜக அரசு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் தமிழகத்திற்கான அதிகளவிற்கான வரி வருவாய் மற்றும் கடந்தாண்டை விட அதிகமாக கிடைக்கும் எனவும் உட்கடமைப்பு வசதிகளில் தமிழகத்திற்கு அதிகளவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் நாடு முழுவதிலும் உள்ள கல்வி உட்கட்டமைப்பு , வளர்ச்சி /தொழில்துறை சிறுகுறுந் தொழில், வேளாண்மை உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டங்களால் தமிழகத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என தெரிவித்தார்.

எனவே இந்த மத்திய அரசின் பட்ஜெட் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்ய வேண்டாம் என தெரிவித்தார்.

What do you think?

அரசனுக்கும் பாதுகாப்பு இல்லை ஆண்டிக்கும் பாதுகாப்பு இல்லை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இங்க் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்