in

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை


Watch – YouTube Click

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணை

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய சரகத்திற்க்கு உட்பட்ட ரயில்வே நிலையம் அருகே அத்திகுளம் கண்மாய் கரையில் அடையாளம் தெரியாத 68 வயது மதிக்க தக்க ஆண் நபர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பெயரில் சென்று பார்த்த பொழுது முகத்தில் இரத்த காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். பின்னர் இறந்தவரின் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இறந்து கிடந்த நபரின் புகைப்படத்தை அனைத்து வாட்ஸ் ஆப் குரூப்களிலும் அனுப்பியதன் அடிப்படையில் இவர் மதுரை ரயில் நிலையத்தில் கார் ஓட்டுனராக இருந்து வருகின்ற முருகன் என்றும் மதுரை பைகாராவை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.

இவரிடம் 28.02.24 அன்று மதுரை ரயில்வே நிலையத்தில் இருந்த பொழுது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வந்து நாங்கள் சாத்தூர் இருக்கன்குடி கோவிலுக்கு செல்ல வேண்டும் வாடகைக்கு கார் வேண்டும் என்று கேட்டுள்ளனர். பின்னர் அவர் போகலாம் என்று சொல்லி TN 07 AM 8007 என்ற டவேரா காரை எடுத்துக்கொண்டு சவாரி சென்றுள்ளார்.

இரவு நேரம் ஆகியும் கார் திரும்ப மதுரைக்கு வராததால் கார் ஓனர் பால்பாண்டி இறந்த நபரான முருகனுக்கு போன் செய்து பார்த்த பொழுது போன் சுவிட்ச் ஆஃப் என்று வந்தவுடன் மதுரை திலகர் திடல் காவல் நிலையத்தில் சென்று வாய்மொழியாக எனது காரை எடுத்துச் சென்ற முருகனையும் காரையும் காணவில்லை என்று கூறியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் காவல்துறையினர் தீவிர விசாரணையில், மேற்படி மூன்று நபர்களும் கார் ஓட்டுனரான முருகனை கொலை செய்து விட்டு காரை கடத்தி சென்றுள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக் நகர் பகுதியில் வசித்து வரும் ருக்சனாபர்வீன், செய்யது அபுதாகீர் என்பவரின் இரண்டவது மகனான சீராபானு கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணமாகி பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் அவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனது தாய் தந்தை வீட்டில் வசித்து வந்த நிலையில் தனது மகளுக்கு கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது அசாருதீன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் இவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மறுபடியும் தனது தாய் தந்தை வீட்டில் சீராபானு வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் முகமது அசாருதீன், பார்த்தால் அடையாளம் தெரிந்த நபர்கள் இரண்டு பேர் ருக்சனாபர்வீன் வீட்டிற்குள் நுழைந்து தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து தனது மகளை வலுக்கட்டாயமாக சிகப்பு கலர் காரில் கடத்தி சென்றதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் தாய் புகார் அளித்தார்.

இந்நிலையில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டு மதுரையில் ஓட்டுனரை கொன்றுவிட்டு காரை கடத்திய கும்பல் இந்தப் பெண்ணையும் கடத்தி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் மதுரை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் விசாரித்த போது முகமது அசாருதீன் தான் வாடகை கார் ஓட்டுநர் முருகனை கொலை செய்து அத்திகுளம் கண்மாய் கரையில் போட்டு விட்டு காரை கடத்தி சென்றதாக தெரிய தெரிய வருகிறது.

இந்நிலையில் காவல்துறையினர் முகமது அசாருதீன் மற்றும் பார்த்தால் அடையாளம் தெரிந்த நபர்கள் இருவர் மீது கொலை வழக்கு,ஆள் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தனிப் படைகள் அமைத்து வலை வீசி தேடி வந்த நிலையில் திருநெல்வேலி அருகே வள்ளியூர் பகுதியில் வைத்து முகமது அசாருதீன் வயது 26 அவரது நண்பர்கள் நல்லகுற்றாலம் தெருவை சேர்ந்த தங்கமாரியப்பன் வயது 22 ,சிவகாசியை சேர்ந்த விக்னேஷ் வயது 26 மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பெண்ணையும் காரையும் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு நான்கு பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த கொலை வழக்கில் கடத்தப்பட்ட பெண்ணிற்கும் சம்பந்தம் உண்டா என பல்வேறு கோணங்களில் விசாரணையை காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

ஆண்டவன் ஒரு பொம்பள புள்ளய கொடுக்கலையே சாமி

பேரூராட்சியில் சேதம் அடைந்த சமுதாயக்கூடம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை