in ,

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா பதினாறு சக்கர சப்பரத்தில் வீதி உலா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஆடிப்பூர திருவிழா பதினாறு சக்கர சப்பரத்தில் வீதி உலா

 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு பதினாறு சக்கர சப்பரத்தில் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீரெங்கமன்னார் திரு வீதி உலா நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவின் முதல் நாளான நள்ளிரவு 16 சக்கர சப்பரம் ரத வீதி உலா நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் திருவாடிப்பூர உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முதல் நாளான நள்ளிரவு ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்க மன்னார் 16 சக்கர சப்பரத்தில் எழுந்தருளிய பின் பக்தர்கள் கோவிந்தா.. கோபாலா… என்று கோஷத்துடன் சப்பரத்தை இழுத்து வந்தனர்.

கீழ ரதவீதியில் துவங்கிய சப்பரம் தெற்குரத வீதி, மேலரத வீதி. வடக்குத வீதி ஆகிய விதிகள் வழியாக வலம் வந்து நிலையம் அடைந்தது.

திருவடிபூரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்திற்கு முன்னோட்டமாக இந்த 16 சக்கர சப்பரம் வீதி உலா நடைபெறுவது வழக்கமாகும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மதுரை மேயர் இந்திராணி தலைமையில் தொடங்கியது

முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவு