in

புனித செபஸ்தியார் ஆலய திருவிழா 23 ஆம் ஆண்டு தேர் பவனி

சிக்கல் மேலக்கரைஇருப்பு புனித செபஸ்தியார் ஆலய பெரிய தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாகப்பட்டினம் மாவட்டம், சிக்கலை அடுத்த மேலக்கரைஇருப்பு கிராமத்தில் பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 5ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று நடைபெற்றது

முன்னதாக ஆலயத்தில் நாகை மறைவட்ட பங்கு அதிபர் பன்னீர்செல்வம், உதவி பங்கு தந்தை ராயல் பிரிட்டோ தலைமையில் சிறப்பு கூட்டுத்திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித மிக்கல் சம்மனசு, புனித ஆரோக்கிய மாதா, புனித செபஸ்தியார், உள்ளிட்ட சொரூபங்கள் தனித்தனி தேரில் வைக்கப்பட்டு புனித நீர் தெளிக்கப்பட்டு பேண்ட் வாத்தியங்கள் முழங்க தேர்பவனி நடைபெற்றது தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்து அடைந்தது இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து வண்ணமிகு வானவேடிக்கை நிகழ்ச்சிக்கு நடைபெற்றது

What do you think?

நடிகை சாயாசிங் வீட்டில் திருட்டு

அம்மா அவர்கள் விதி எண் 110ன் கீழ் கதவணைப் பணிகள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு – விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை