நூறு ரூபாய் குறைக்காத ஸ்டாலின் 500 ரூபாய் குறைப்பாரா?
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நகர அதிமுக சார்பில் ஆரணி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கஜேந்திரனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது செஞ்சி நான்கு முனை சந்திப்பு, திண்டிவனம் சாலை, விழுப்புரம் சாலை, திருவண்ணாமலை சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் :
சட்டமன்ற தேர்தலில் சிலிண்டருக்கு 100 ரூபாய் குறைப்பதாக கூறி ஆட்சிக்கு வந்து முதலமைச்சரான ஸ்டாலின் இப்பொழுது சிலிண்டருக்கு 500 ரூபாய் குறைப்பதாக கூறுகிறார்.
நூறு ரூபாய் குறைக்க வக்கில்லாத திரு ஸ்டாலின் 500 ரூபாய் குறைப்பாரா…? பட்ட நாமம் தான் போடுவாரு….மேலும் இவருக்கு அண்ணனான திரு மோடி அவர்கள்
நான் பிரதமர் ஆனால் ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் வழங்குவதாக கூறினார்-ஆனால் 15 ரூபாய் கூட வழங்க இல்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பிரதமர் மோடியை விமர்சித்து பேசினார்.
மேலும் 2014 ஆம் ஆண்டில் ஆட்சி பொறுப்பேற்ற போது சிலிண்டரின் விலை 380 ரூபாய், இன்றைக்கு 1200 ரூபாய்-தேர்தல் வரும்போது தான் மோடிக்கு உங்களையெல்லாம் தெரிகிறது 2014 ஆம் ஆண்டில் 380 இருந்த சிலிண்டர் விலையை 1200 ரூபாய்க்கு ஏற்றி தேர்தல் வரும் போது 200 ரூபாய் குறைத்து என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மோடியை விமர்சித்து பேசினார்.