உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தொடக்கம்
உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் தொடக்கம் நாகை அருகே திருக்குவளை வட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு: பள்ளியில் மாணவ மாணவிகளுடன் வகுப்பறையில் அமர்ந்து தலைக்கவசம் குறித்து விழிப்புணர்வு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ எனும் புதிய திட்டம் இன்று தொடங்கியது. இந்த திட்டத்தின் படி நாகை மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், மாவட்ட வருவாய் அலுவலர் பேபி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் திருக்குவளை வட்டத்தில் ஒரு நாள் முழுவதும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
முன்னதாக நீர்முளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் ஆட்சியர் மருத்துவமனையில் தொற்று நோய்களின் தாய்மார்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்த கோப்புகளையும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து திருக்குவளையில் உள்ள கீழையூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் உளுந்து பயறு கிடைத்த விவசாயிகளிடம் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு தேவைகள் குறித்து கேட்டறிந்தார்
தொடர்ந்து அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடுபொருள்களின் அளவு மற்றும் அதன் கோப்புகளை பார்வையிட்ட ஆய்வு செய்தார். விவசாயிகளிடம் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்கேட்டறிந்தார்.
கால்நடை மருத்துவமனை திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம் உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் அஞ்சுகம் முத்துவேலர் மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறையில் மாணவ மாணவிகளுடன் அமர்ந்து தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்
அதன் தொடர்ச்சியாக மாலை திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரில் தெரிவிக்கவும் மனுக்கள் அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆய்வின் போது சுகாதார பணிகள் துறை துணை இயக்குநர் விஜயகுமார், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் தேவேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.