in

நடிகர்கள் கட்சி தொடங்குவது பெரிதல்ல மக்களுக்கான கட்சியாக இருக்க வேண்டும் – செல்லூர் ராஜு பேச்சு

நடிகர்கள் கட்சி தொடங்குவது பெரிதல்ல மக்களுக்கான கட்சியாக இருக்க வேண்டும் – செல்லூர் ராஜு பேச்சு

 

நடிகர்கள் கட்சி தொடங்குவது பெரிதல்ல மக்களுக்கான கட்சியாக இருக்க வேண்டும் … வெறும் ரசிகர்களை வைத்து மட்டும் ஆட்சிக்கு வர முடியாது -2026க்குள் திமுகவினர் ஆட்சியை நம்மிடம் ஒப்படைத்து சென்று விடுவார்கள் – மதுரையில் நடைபெற்ற உறுப்பினர் அட்டை வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

மதுரை மாநகர் மாவட்ட வடக்கு 6ம் பகுதி கழகம் சார்பில் மதுரை அண்ணாநகர் பகுதியில் இருக்கக்கூடிய அம்பிகா திரையரங்க அருகில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள் நிர்வாகிகள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்ட நிலையில் புதிதாக இணைந்த கட்சியின் உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார்

முன்னதாக விழா மேடையில் அவர் பேசுகையில்

கூடியிருந்த பொதுமக்களை பார்த்து உங்களுக்கெல்லாம் டீ வந்து விட்டதா?? வந்துரும் !!என்று தனக்கே உரிய பாணியில் (கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்களுக்கு கட்சி சார்பாக டி விநியோகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது)

நகைச்சுவையாக பேசி தனது உரையை தொடங்கினார்

இன்றைய காலகட்டத்தில் படத்தைப் பார்த்தாலே பிள்ளைகள் கெட்டுப் போகிறது பணத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் நடிக்கிறார்கள்

பணத்திற்காக எப்பேர்ப்பட்ட கதாபாத்திரமும் கிடைத்தாலும் நடிக்கக்கூடிய நடிகர்களுக்கு மத்தியில் எத்தனை கோடி கொடுத்தாலும் பான் மசாலா போன்ற விளம்பரங்களில் நான் நடிக்க மாட்டேன் என்று சொன்ன மாதவன் …

மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்லுகின்ற வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இன்றும் நீங்காமல் இடம் பிடித்திருப்பவர் நமது புரட்சித்தலைவர் எம்ஜிஆர்

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் …..

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடு இருக்குது தம்பி…
ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா…

என்று நாட்டுப்பற்றை மக்கள் மனதில் விதைக்கும் வண்ணம் பல பாடல்கள் மூலம் நமக்கான உத்வேகத்தை கொடுத்தவர் புரட்சித்தலைவர்

நான் மக்களோடு நின்று மாளிகையை பார்க்கிறேன் நீங்கள் மாளிகையில் இருந்து மக்களை பார்க்கிறீர்கள் என்று சொன்னார் எம்ஜிஆர்

இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொரு எம்ஜிஆர் பாடல்களையும் பாடி அவருடைய கருத்துக்கள் குறித்து மக்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கையில்

கட்சி தொடங்குவது பெரிதல்ல யார் கட்சி தொடங்கினாலும் அது மக்களுக்கான கட்சியாக இருக்க வேண்டும் வெறும் ரசிகர்களை வைத்து மட்டும் ஆட்சிக்கு வர முடியாது

அதிமுகவைப் பொறுத்தவரை கட்சி தொடங்கி 5 ஆண்டுகளிலேயே ஆட்சிக்கு வந்தவர் எம்ஜிஆர்

அதிமுக ஆட்சி காலகட்டத்தில் எண்ணற்ற பல நலத்திட்டங்கள் கொண்டுவரப்பட்டன

மதுரை தேனி சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பெண் சிசுக்கொலை நடைபெற்று வந்த நிலையில் அவை தடுக்கப்பட்டு தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தவர் அம்மா

வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய குறைகளை பிறரிடம் கூற முடியாத நிலைமையில் இருந்தபோது அவற்றை அறிந்து மகளிர் காவல் நிலையம் கொண்டு வந்தது அதிமுக

தொட்டில் குழந்தை திட்டத்தை அன்னை தெரசாவே பாராட்டினார்கள்

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி பாரதி சொன்ன சொல்லிற்கினங்க தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய கன்னியாகுமரி முதல் தலைநகர் சென்னை வரை அனைவரும் உணவருந்த கூடிய வகையில் ஒரு ரூபாய்க்கு இட்லி மூன்று ரூபாய்க்கு தயிர் சாதம் ஐந்து ரூபாய்க்கு சாம்பார் சாதம் கொண்டு வந்த திட்டத்தை தற்போது திமுக முடக்கிவிடும் நிலையில் உள்ளது

கொரோனா காலகட்டத்தில் தமிழக மக்களுடைய பொருளாதாரம் மிகவும் நலிவடைந்த நிலையில் இருந்த போது அதிமுக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் பரிசாக 2000 ரூபாய் கொடுத்தார்

ஒரு குடும்பத்திற்கு 60 கிலோ முதல் 70 கிலோ வரை விலையில்லா அரிசி வழங்கப்பட்டது

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வீட்டு வரி குடிநீர் வரி சாலை வரி மின் கட்டண உயர்வு குப்பை வரி வரை அனைத்திலும் உயர்வு

நமது கிராமங்களில் மைனர் ஜோக் என்று சொல்லுவார்கள்

அந்த மைனர் ஜோக்கால் எந்த பிரயோஜனமும் இருக்காது

குறிப்பாக வெள்ளை வேஷ்டி துண்டு போட்டு மடிப்பு கலையாமல் அப்படியே பவனி வருவார்கள்

இதனால் ஒரு பிரயோஜனமும் ஆகாது என்பது சொல்லுவது போல

தற்போது நம்முடைய முதலமைச்சர் உலகம் சுற்றும் வாலிபனாக மாறி வருகிறார்

இங்கே உள்ளூர் மக்களை அவர் பார்க்கவில்லை

தமிழக மக்கள் பசியும் பட்டினியமாக இருக்கக்கூடிய நிலையில் கார் ரேஸ் தேவையா

மதுரைக்கு அமைச்சராக இருக்கக்கூடிய இரண்டு அமைச்சர்கள் என்ன செய்தார்கள்

மூதாதையர் முதல் மூன்றாவது தலைமுறை வரை தற்போது இந்த கட்சியில் உறுப்பினர் அட்டை வாங்க வந்திருப்பது பெருமை அளிக்கிறது

கருணாநிதியுடைய மகன் ஸ்டாலின் மட்டுமல்ல உதயநிதி அல்ல எத்தனை நிதி வந்தாலும் இந்த கட்சியை ஆட்டோ அசைக்கவும் முடியாது

வரும் 2026 இல் இவர்களே இந்த ஆட்சியை நம்மிடம் கொடுத்துவிட்டு சென்று விடுவார்கள் போதும் எங்களுக்கு ஆசை தீர்ந்துவிட்டது உலகம் முழுவதும் சுற்றி பார்த்து விட்டோம் எனது மகனும் நன்றாக வாழ்ந்து விட்டார்

சினிமாவில் நயன்தாரா திரிஷா போன்ற நடிகைகளுடன் நடித்துவிட்டார்

தற்போது சட்டமன்ற உறுப்பினராகி அமைச்சராகி விட்ட நிலையில் விரைவில் ஆட்சியை நம்மிடம் ஒப்படைத்து விட்டு சென்று விடுவார்கள்

ஆட்சியைப் பிடிப்பதற்கு நாம் கஷ்டப்பட வேண்டியது இல்லை மக்கள் அவர்களுக்கு வாக்களிக்க தயாராக இல்லை

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மூன்று ஆண்டு கால கட்டங்களில்

மகனின் திருமணத்தை பிரமாண்டமாக நடத்திய அமைச்சர் மூர்த்தி மதுரைக்கு என்ன செய்தார் ??

மதுரை மக்களுக்கு என்ன செய்தார்

இந்த கேள்வியை நாங்கள் கேட்கவில்லை வாக்களித்த மக்கள்தான் கேட்கிறார்கள்

நிதித்துறை அமைச்சராக இருந்து தற்போது தகவல் துறை அமைச்சராக மாறிய பழனிவேல் தியாகராஜன் ?..என்ன செய்தார் மதுரைக்கு

மதுரை மக்களுக்கு தங்க தடையின்றி தண்ணீர் கிடைக்க திட்டங்களை கொண்டு வந்தது அதிமுக

மதுரையில் இருக்கக்கூடிய வண்டியூர் கண்மாய் மாடக்குளம் கண்மாய் நிலையூர் கண்மாய் உள்ளிட்டவைகளில் குடிமராமத்து பணிகளின் காரணமாக தற்போது நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.

உங்களால் வளர்க்கப்பட்ட இந்த இயக்கம் …32 காலம் தமிழகத்தில் நல்ல ஆட்சியை கொடுத்த கழகம் இந்த அதிமுக தான்

தற்போது இருக்கக்கூடிய ஆட்சியில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாக இருக்கிறார்கள்

இதை நாம் மாற்ற வேண்டுமானால் 2026 இல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும்

அதற்கு நீங்கள் வாக்களித்து எடப்பாடி யார் அவர்களை முதலமைச்சராக வேண்டும்

பெண்களாகிய நீங்கள் காய்கறி சந்தை மளிகை கடை உள்ளிட்டவர்களுக்கு செல்லும்போது திண்ணைப் பிரச்சாரமாக எடுத்துச் சொல்ல வேண்டும்

கத்தரிக்காயை கிள்ளிப்பார்த்தோம் வெண்டிக்காயை உடைத்து பார்த்தும் வாங்கக்கூடிய நீங்கள் அதிமுக மற்றும் திமுக ஆட்சியை ஒப்பிட்டு மக்கள் மத்தியில் சென்னை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்

அதிமுக உடைய நலத்திட்டங்களையும் திமுக தற்போது முடக்கிவிடும் திட்டங்களையும் எடுத்துக் கூற வேண்டும்

மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சர் ஆக்குவதே நமது எண்ணமாக இருக்க வேண்டும்

எம்ஜிஆர் ஜெயலலிதா அவர்களது வழியில் நல்லவர் வல்லவர் சிறந்த நிர்வாக திறன் கொண்டவரை மீண்டும் முதல்வராக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது.

வரும் 2026 நமக்கான ஆட்சி நமக்கான முதல்வர் எடப்பாடி யார் என்று தனது உரையை நிறைவு செய்தார்..

What do you think?

தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் கண்காட்சி‌

தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 2024-ம் ஆண்டிற்கான சாகர் கவச் பாதுகாப்பு ஒத்திகை