in

புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டி


Watch – YouTube Click

புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா போட்டி

 

புதுச்சேரியில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 20 வகையான யோகாசனங்களை செய்து அசத்தினர்

யோகாசனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரியில் மாநில அளவிலான யோகா போட்டி வில்லியனூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பள்ளி விளையாட்டு மற்றும் செயல்பாடுகள் அமைப்பு சார்பில் நடைபெற்ற யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் மத்தியானம், மலாசனா, கருடாசனா, உத்திராசனா சர்வாங்க சனா, உள்ளிட்ட 20 வகையான ஆசனங்களை செய்து மாணவ மாணவிகள் அசத்தினார்கள்.

இதில் தேர்வு செய்யப்பட்ட ஐந்து பேருக்கு விருதுகளும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற கைவினை கலைஞர் முனுசாமி யோகாசனத்தில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

பின்னர் பேட்டியளித்த ஒருங்கிணைப்பாளர் மாதவி பழங்காலங்களில் உணவு வகைகளால் ஆரோக்கியமாக மக்கள் வாழ்ந்தார்கள் இன்றைய காலங்களில் அது மாதிரியான உணவு வகைகள் இல்லை ஆகையால் ஆரோக்கியமாக நம்மால் வாழ இயலவில்லை.

இது மாதிரியான யோகாசனங்களை செய்தால் நம் ஆரோக்கியமாக வாழ முடியும் குறிப்பாக பெண்களுக்கு மன அழுத்தத்தை போக்கவும் உடல் நலம் ஆரோக்கியமாக பெற இது மாதிரியான யோகாசனங்களை செய்தால் ஆரோக்கியமாக வாழ முடியும் என மாதவி தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

கரூரில் திரையரங்கில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினால் ஒருமையில் பேசுவதாக ரசிகர்கள் குற்றச்சாட்டு

 ஆண்டாண்டு காலமாக தொடரும் பழமை வாய்ந்த ஐதீகம்