நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு புதுச்சேரியில் ஆட்சி மாற்றம்
பாஜக-வினர் தீயவர்கள் என தெரிந்தும் ரங்கசாமி ஆதரவளிக்கிறார்,தேர்தலுக்குப் பிறகு தூக்கி எறியப்படுவார்
அதிமுக வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரத்தில் மாநில செயலாளர் அன்பழகன் கடும் விமர்சனம்
புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து
ராஜ்பவன் தொகுதி கணேஷ் நகரில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,..
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மகாபாரத போர் போன்றது. இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என தீர்மானிக்கும் தேர்தலாகும். பாண்டவர்கள் போன்று அதிமுக இருக்கிறது.
மகாபாரத போரில் கெட்டவர்கள் என தெரிந்தும் கவுரவர்களுக்கு ஆதரவு அளித்த பீஷ்மர் போல் பாஜக தீயவர்கள் என தெரிந்தும் அவர்களுக்கு ரங்கசாமி ஆதரவளிக்கிறார்.
இந்த தேர்தலுக்கு பிறகு புதுச்சேரியில் பல சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றத்தை பாஜக நிச்சயமாக செய்யும். அப்போது முதலமைச்சராக ரங்கசாமி இருக்கமாடட்டார். பாஜகவினரிடம் சிறை பறவையாக உள்ள ரங்கசாமி தூக்கி எறியப்படுவார் இதை என்.ஆர்.காங்கிரஸ் உண்மை தொண்டர்கள் உணர்ந்து பாஜகவை புறக்கணித்து அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என பேசினார்…