காரைக்காலில் புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை வழிபாடு
காரைக்காலில் புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை வழிபாட்டில் ஏராளமான கிரிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடு.
புதுச்சேரி யூனியன் பிரதேசம்; காரைக்காலில் புகழ் பெற்ற தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு சிலுவை பாதை வழிபாடு நடைபெற்றது.காரைக்கால் தோமாஸ் அருள் வீதியிலிருந்து புறப்பட்ட சிலுவை பாதை நிகழ்ச்சி முக்கிய வீதிகள் வழியாக தூய தேற்றரவு அன்னை ஆலயத்தை வந்தடைந்தது.
சிலுவை பாதையின் 12ம் நிலையின் போது ஏசுநாதரை சிலுவையில் அறைந்து வைத்ததை நினைவு கூறும் விதமாக பங்கு தந்தை பால்ராஜ் குமார் சிலுவையில் அறைந்து வைத்த காட்சியினை ஏராளமான கிருஸ்தவர்கள் பார்வையிட்டு வழிபட்டனர்.தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு திருப்பலி மற்றும் ஜெப வழிபாடுகளிலும் ஏராளமான கிருஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற சிலுவை பாதை நிகழ்வு மற்றும் சிறப்பு திருப்பலியினை பங்கு தந்தை பால்ராஜ் குமார் மற்றும் உதவி பங்கு சாமிநாதன் செல்வம் ஆகிய குருமார்கள் நடத்தி வைத்தனர். நாளை இரவு ஏசு பிரான் மீண்டும் உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.