கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி காட்டூர் ஆயில் மில்லில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டது.
பள்ளி வாகனங்கள், மணிக்கு செல்வோர் வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கி தவிப்பு
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆயில் மில் செக் போஸ்டில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எட்டடி உயரம் கொண்டார் கலைஞரின் முழு உருவ வெண்கல சிலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில் தமிழக முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள், சிலை திறப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்பாட்டில் காட்டூர் ஆயில்மில் செக்போஸ்ட்டில் 10 அடி பீடமும், 8 அடி உயரமும், 13 பொன்மொழிகள் கொண்ட முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டது.
திறப்பு விழாவானது இன்று காலை நடைபெற்றது.
தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பிரம்மாண்டமான தோரண வாயில்கள் அமைக்கப்பட்டது.கலைஞரின் திரு உருவ சிலையை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின், M.P. கனிமொழி,நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் உடனிருந்தனர்.
சிலை அமைக்கப்பட்ட இடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் இனிக்கோ இருதயராஜ், அப்துல் சமது, முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் ஆகியோர் கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.
இந்நிகழ்வில் திரளான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டு கையில் கொடிகளை ஏந்தியும், பலன்களை பறக்க விட்டும் கலைஞர் வாழ்க என கோஷமிட்டனர்.
திறப்பு விழாவிற்காக திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து பிரம்மாண்டமான தோரணவாயில் அமைக்கப்பட்டது.இதனால் இரு நாட்களாகவே திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இன்று காலை திறப்பு விழாவிற்காக தேசிய நெடுஞ்சாலையில் இருவழிப்பாதையை ஒருவழிப்பாதையாக மாற்றி போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.
இதனால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன் பள்ளி கல்லூரி வாகனங்கள் பணிக்கு செல்வோர் வாகனங்கள் சிக்கி தவித்தன.அதேபோல் சாலை ஓரங்களில் நன்கு வளர்ந்த மரங்களை வெட்டி அகற்றி உள்ளனர்.
சாலையின் நடுவே LED திரை அமைத்திருந்தனர். மேலும் அவசரத்து செல்லும் ஆம்புலன்ஸ் கூட போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.தொடர்ந்து சிலை திறப்பு விழா முடிந்த பிறகு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். ஒரு சிலை திறப்பு விழாவிற்கு திமுகவினர் செய்த அலப்பறையால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர்.