விழிப்புடன் இருங்கள் நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள்
மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பயங்கரவாதிகளால் குண்டுவெடிப்பு ஏற்பட்டது இதில் 117 பேர் கொல்லப்பட்டனர் 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சி ஐ எஸ் எப் என்னும் தொழில் பாதுகாப்பு படையினர் கிரேட் இந்தியன் சைக்கிள் என்ற பெயரில் முதல்முறையாக வங்காள தேசத்தின் கடற்கரையில் இருந்து நாடு முழுவதும் சைக்கிள் பேரணி நடைபெறுகிறது.
கடந்த ஏழாம் தேதி தொடங்கப்பட்ட இந்த பேரணி குஜராத் லக் லக் பட்டி..யில் இருந்து கன்னியாகுமரி விவேகானந்தா நினைவிடத்திற்கு வருகின்றனர் தங்கள் பகுதிக்கு வரும் பேரணி க்கு ஆதரவு தரவேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
மேலும் நம் நாட்டின் பெயர் மற்றும் நிம்மதி சந்தோஷத்தை கெடுக்க பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டுக்குள் ஊடுருவி வருகின்றனர். எனவே கடலோர மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் சந்தேகப்படும் படியான நபர்கள் இருந்தால் அவர்கள் பற்றி போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த் x தளத்தில் பதிவிடுள்ளார்.