in

புதுச்சேரி தவளக்குப்பம் ராஜீவ் காந்தி அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை படிப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை

புதுச்சேரி தவளக்குப்பம் ராஜீவ் காந்தி அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை படிப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்

தவளைகுப்பம் இராஜீவ் காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய உயர்கல்வி திட்ட நிதியில் (RUSA) 3383 சதுர அடியில் 3 கோடியே 67 லட்ச ரூபாய் இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கணினி ஆய்வகக் கட்டிடத்திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கணினி ஆய்வக கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

தொடர்ந்து விழாவில் பேசிய உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்…

இந்தக் கல்லூரியில் கூடுதல் வகுப்பறை கட்டிக் கொடுக்க வேண்டும் என்றும் முதுநிலை படிப்புகள் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் இடம் கல்லூரி நிர்வாகத்தை சார்பில் கோரிக்க வைக்கப்பட்டிருந்தது அந்த அந்த கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது அதன்படி அரசு கல்லூரிக்கு புதிய வகுப்பறைகளும் முதல் நிலை படிப்பு தொடங்குவதற்கான அனுமதியும் விரைவில் பெற்று தரப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

மேடைப்பேச்சு: நமச்சிவாயம், கல்வி துறை அமைச்சர் புதுச்சேரி

விழாவில் அரசு செயலர் ஜவகர் உயர் கல்வித்துறை இயக்குனர் அம்மன் சர்மா கல்லூரி முதல்வர் ஹென்னா திட்ட ஒருங்கிணைப்பாளர் முனை வருமா உள்ளிட்ட விரிவுரையாளர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.

What do you think?

விஜய் …அஜித்து…க்கு ஏன் வாழ்த்து கூறவில்லை

புதுச்சேரி சட்டப்பேரவை வரும் பிப். 12-ல் கூடுகிறது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்துள்ளார்.