இன்னும் என்னால் மறக்க முடியவில்லை… நெருங்கிய நபரை இழந்து தவிக்கும் கீர்த்திசுரேஷ்…
கீர்த்தி சுரேஷ் பிசியான ஆர்டிஸ்ட் ஆக இருந்தாலும் இவருக்கு நட்பு வட்டங்கள் அதிகம் அடிக்கடி நண்பர்களின் வீட்டுக்கு செல்வதும் அவர்களுடன் சுற்றுலா சென்று புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடுவார்.
அப்படிப்பட்ட தோழிகளிள் ஒருவரின் துயரமான சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் கீர்த்தி சுரேஷ் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இவரின் நெருங்கிய தோழி மனிஷா என்பவருக்கு இளம் வயதிலேயே பிரைன் Tumour நோயால் பாதிக்கப்பட்டு அண்மையில் மறைந்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் அவரைப்பற்றி தன் பிறந்தநாள் அன்று பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் அவர் கூறியதாவது கடைசியாக நான் என் தோழியை பார்க்கும் பொழுது அவள் சுயநினைவு இல்லாமல் இருந்தால் என் உணர்வுகளை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீருடன் மருத்துவமனையை விட்டு நான் வெளியே வந்து விட்டேன்.
அவள் மறைந்து ஒரு வாரம் ஆகியும் என்னுள் நான் கேட்கும் கேள்வி இதுதான் 21 வயதில் பிரைன் ட்யூமர் நோய் ஆரம்பித்து எட்டு வருடங்களாக அந்த நோயுடன் போராடியவள் என் தோழி ஒரு இளம் பெண் அவள் வாழ்க்கையை துவங்குவதற்கு முன்பே இந்த உலகத்தை பார்ப்பதற்கு முன்பே அவளுடைய விருப்பங்கள் கனவுகள் என்று எதுவும் நிறைவேறாமல் எதற்காக இப்படி நடக்க வேண்டும் என்று எனக்கு பதில் தெரியவில்லை.
நீ மறைந்து ஒரு மாதம் ஆகிவிட்டாலும் தினசரி உன் நினைவுகளுடன் உன்னை பற்றி நினைக்காத நாளே இல்லை என்று வருத்தத்துடன் பதிவிட்டு இருந்தார்.