in ,

நாகை அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்புறவு செய்த குற்றவாளி மீது கடும் நடவடிக்கை

நாகை அருகே வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்புறவு செய்த குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் கிராம மக்கள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

நாகை மாவட்டம் தெற்குப் பொய்கைநல்லூரில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு உயரிய சிகிச்சை அளிக்க வேண்டும்,

பாதிக்கப்பட்ட பெண்ணின் மகளின் படிப்பிற்கு உதவ வேண்டும் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் மேலும் நாகப்பட்டினத்தில் நிலவும் கஞ்சா சாராயத்தை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் கிராம மக்கள் இணைந்து பரவை கடைவீதியில் அனைத்து இந்திய ஜனநாயக மாத சங்க மாவட்ட செயலாளர் லதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

What do you think?

நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் 1008  லிட்டர் பால் அபிஷேகம்

நாகை வேதாரண்யம் ஸ்ரீ வேம்படி மாரியம்மன் கோவில் ஆடி திருவிழா அரச மரத்திற்கும், வேப்ப மரத்திற்கும் திருமணம் நடைபெற்றது.