சாத்தூர் பட்டாசு ஆலைகளில் சரவெடிக்கு அனுமதி கோரி வேலை நிறுத்தம்
சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை, தாயில் பட்டி, ஏழாயிரம் பண்ணை,துலுக்கன்குறிச்சி, செவல்பட்டி, பனையடிப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.
வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான பட்டாசு ஆலைகள் மாவட்ட வருவாய் அலுவலர் அனுமதி பெற்று சரவெடிகள் மட்டும் தயாரிக்க அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகள் தான் அதிகம் இந்த பகுதியில் இயங்கி வருகிறது.
இங்கு சரவெடிகள் மட்டும் தயாரிக்க வேண்டும் வேறு பட்டாசுகள் தயாரிக்க அனுமதி கிடையாது மேலும் சரவெடிகளுக்கு மாற்றாக வேறு பட்டாசுகள் தயாரிக்கவும் பேரியம் நைட்ரேட் வேதிப்பொருளுக்கு பதிலாக மாற்று பொருள் எதுவும் நீதி மன்றத்தில் கூறிய வழி முறையில் மத்திய அரசு பட்டாசு ஆலைகளுக்கு தெரிவிக்க வில்லை வழங்கவும் இல்லை. எனவும் உற்பத்தியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் பட்டாசு ஆலைகளில் தடையும் தொடர் ஆய்வும் அச்சுருத்தலும் நடத்தி வருவதால் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், கடந்த 2018ல் உச்சநீதிமன்றத்தில் பட்டாசு வெடிப்பதால் ஒலி மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக பட்டாசு உற்பத்திக்கு தடைவிதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் பேரியம் பயன்படுத்தவும் சரவெடி தயாரிக்கவும் உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
மத்திய அரசு இதுவரை எந்தவிதமான மாற்று பொருள தெரிவிக்காத நிலையில் தமிழக அரசின் மாவட்ட வருவாய் துறை அலுவலர்களும் ஆய்வு என்று பெயரில் தொடர்ந்து பட்டாசு தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை நெருக்கடியில் இருப்பதாகவும் இதன் காரணமாக மிகுந்த அச்சத்துடனே பணியில் ஈடுபடுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனை கண்டிக்கும் விதமாக சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைகளுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.