உள்ளாட்சி அரசு பணியாளர்கள் சங்கங்களின் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாகையில் தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும்.
காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், சரண்டர் ஒப்படைப்பை வழங்கிட வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை அரசு பணியாளர்களாக அறிவித்திட வேண்டும்.
தலைமைச் செயலகம் உட்பட அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.