in

குடும்பத்தை நடத்த போராடுகிறேன் இயக்குனர் ராசு மதுரவன் மனைவி…நடிகர்கள் எங்களை கண்டு கொள்ளவில்லை


Watch – YouTube Click

குடும்பத்தை நடத்த போராடுகிறேன் இயக்குனர் ராசு மதுரவன் மனைவி…நடிகர்கள் எங்களை கண்டு கொள்ளவில்லை

 

குடும்ப செண்டிமெண்ட்டை மையமாக வைத்து இயக்குவதில் வல்லவர் இயக்குனர் ராசு மதுரவன்.

இவர் இயக்கிய மாயாண்டி குடும்பத்தார் மற்றும் முத்துக்கு முத்தாக ஆகிய படங்கள் ரசிகர்களின் உணர்வுகளை உலுக்கிய படங்கள் என்று கூறலாம்.

இவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் மறைந்தார். அதன் பிறகு இவருடைய குடும்பம் பல போராட்டங்களை சந்தித்து வந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி ராசு மதுரவனின்
நினைவு நாள் அனுசரிக்க பட்ட போது அவருடைய மனைவி பவானி ஒரு பேட்டி அளித்துள்ளார்.

அதில் தன் குடும்பம் அன்றாட செலவிற்காக அல்லாடுகிறது .எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. என்னுடைய கணவரின் இயக்கத்தில் பலர் நடித்திருந்தாலும் எங்களுக்கு யாரும் உதவி கரம் நீட்டியது இல்லை.

என் மகள்களின் படிப்பு செலவுக்காக நான் போராடுகின்றேன் என்று கூறி உள்ளார். அந்த பேட்டியை பார்த்த சிவகர்த்திகேயன் இரண்டு மகள்களின் படிப்பு செலவுக்காக ரூபாய் ஒரு லட்சத்தை பள்ளியில் செலுத்தி இருக்கிறார்.

சிவகர்த்திகேயனுக்கு பவானி நன்றி கூறியதை தொடர்ந்து. இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்குனர்கள் சங்கம் சார்பாக ராசு மதுரவன் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு லட்சத்தை நிதியாக அளித்துள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

நடிகை ஓவியா நேற்று மது அருந்திக்கொண்டே ரசிகர்களுக்கு அட்வைஸ்

வனிதா விஜயகுமாரின் எமோஷனல் பதிவு