in

தனியார் பொறியியல் கல்லூரி  பெண்கள் ஹாஸ்டல் ரகசிய கேமரா விவகாரம் மாணவ மாணவியர் தீவிர போராட்டம்

தனியார் பொறியியல் கல்லூரி  பெண்கள் ஹாஸ்டல் ரகசிய கேமரா விவகாரம் மாணவ மாணவியர் தீவிர போராட்டம்

 

தனியார் பொறியியல் கல்லூரி ஹாஸ்டல் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா விவகாரம். மாணவ மாணவியர் தீவிர போராட்டம்.  முழு விசாரணைக்கு ஆந்திர முதல்வர் உத்தரவு.

மாணவன் ஒருவனை பிடித்து சென்று தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ள போலீசார்.

ரகசிய கேமராவை கழிவறையில் அமர்த்த மாணவனுக்கு உதவியதாக கூறப்படும் மாணவியை ரகசியமாக வீட்டுக்கு அனுப்பி வைத்த கல்லூரி நிர்வாகம்.

போலீஸ் விசாரணையில் இருக்கும் மாணவன் 300க்கும் மேற்பட்ட வீடியோக்களை பரவ விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குட்லவெல்லூரில் எஸ் ஆர் குட்லவெல்லூர் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது.

அங்கு ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பொறியியல் படித்து வருகின்றனர். நேற்று முன் தினம் இரவு கல்லூரி பெண்கள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதாக தகவல் பரவி மாணவ, மாணவியர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் ஹாஸ்டல் கழிவறை முழுவதும் சோதனை செய்து பார்த்தனர். ஆனால் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறிய போலீசார் பொறியியல் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவன் ஒருவன் மீது சந்தேகம் கொண்டு அந்த மாணவனை பிடித்து அவருடைய மொபைல் போன், லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி மாணவ மாணவிகள் முன் ஆய்வுக்கு உட்படுத்தினர்.

ஆனால் அந்த மாணவனின் லேப்டாப், செல்போன் ஆகியவற்றில் ஆட்சேபனைக்கு உரிய எவ்விதமான வீடியோவும் இல்லை.

ஆனாலும் மாணவ மாணவிகள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த மாணவன் மாணவி ஒருவரின் உதவியுடன் ரகசிய கேமராவை பெண்கள் கழிவறையில் பொருத்தினான் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.

இந்த நிலையில் இந்த விவகாரம் பற்றி முழு விசாரணை நடத்த கிருஷ்ணா மாவட்ட ஆட்சியருக்கு ஆந்திர முதல் சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆனால் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமராவை பொருத்த அந்த மாணவனுக்கு உதவியதாக கூறப்படும் மாணவியை கல்லூரி நிர்வாகம் அவருடைய பெற்றோருடன் ரகசியமாக நேற்று இரவு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

விவகாரம் விசாரணையில் இருக்கும்போது குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் மாணவியை ரகசியமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தது ஏன் என்ற கேள்வி ஏற்பட்டுள்ளது.

இந்த விவகாரம் பற்றி கூறும் போலீசார் கழிவறைகளில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே மாணவிகள் அச்சப்பட தேவையில்லை என்று தைரியம் கூறுகின்றனர்.

ஆனால் சமூக வலைதளங்களில் அந்த மாணவன் 300க்கும் மேற்பட்ட ஆட்சேபனைக்கு உரிய வீடியோக்களை பரவ விட்டதாக பலமான குற்றச்சாட்டுகள் பரவி வருகின்றன.

What do you think?

கல்லூரி மாணவர்களுக்கு போதை ஸ்டாம்ப் சப்ளை செய்த கேரளா வாலிபர்கள் கைது

ஆந்திரா விஜயவாடா இந்திரகீலாத்திரி மலையில் பாறை சரிவு