இடைவிடாது கராத்தே செய்தும் சிலம்பம் சுற்றியும் மாணவர்கள் சாதனை
திருத்துறைப்பூண்டியில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருமணிநேரம் இடைவிடாது கராத்தே செய்தும் சிலம்பம் சுற்றியும் சாதனை செய்தனர்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் முத்தூஸ் கராத்தே & ஸ்போர்ட்ஸ் அகாடமி ஆரஞ்சு உலக சாதனை கராத்தே மற்றும் சிலம்பம் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ஒரு மணி நேரம் இடைவிடாது கராத்தே செய்தும் சிலம்பம் சுற்றியும் சாதனை செய்தனர்.
இந்த நிகழ்வில் திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை முத்தூஸ் கராத்தே நிறுவனர் முத்துக்குமரன் மற்றும் கராத்தே பயிற்சியாளர்கள் செய்திருந்தனர்.