in

பொதுவெளியில் பேருந்து நிழற்குடையில் அமர்ந்து சிகரெட் பிடிக்கும் மாணவர்கள்

பொதுவெளியில் பேருந்து நிழற்குடையில் அமர்ந்து சிகரெட் பிடிக்கும் மாணவர்கள்

 

சீர்கெட்டுப் போன அரசு பள்ளிகளின் தரத்திற்கு உதாரணமாய், பள்ளியை கட் செய்து விட்டு பொது வெளியில் சிகரெட் அடிக்கும் மாணவர்களின் whatsapp வீடியோ வைரல்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. பள்ளிகளின் தரம் குறைந்ததும், மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிக்க முடியாததும் இதற்கு ஒரு காரணமாக சொல்லப்படும் நிலையில் மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப் பள்ளி சார்ந்த மாணவர்கள் சிலர் பொதுவெளியில் பேருந்து நிழற்குடையில் அமர்ந்து சிகரெட் பிடிக்கும் காட்சிகள் மயிலாடுதுறை பகுதியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மாணவர் சமுதாயம் போதை வஸ்துகளுக்கு அடிமையாகாமல் நல்வழிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

What do you think?

காவலர்களின் நீத்தார் நினைவு தினத்தை முன்னிட்டு 36 குண்டுகள் முழங்க அனுசரிப்பு

திருமணஞ்சேரியில் இந்து சமய அறநிலையத்துறையால் திருக்கோயில் சார்பில் நடைபெற்ற திருமண விழா