உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றை சுத்தப்படுத்தி, மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றை சுத்தப்படுத்தி, மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
ஐந்து மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வைகை ஆற்றின் தூய்மையை மீட்டெடுக்க அரசும் முன்வர வேண்டும்.
மார்ச் 22 உலக தண்ணீர் தினம் முன்னிட்டு வைகை நிதி மக்கள் இயக்கம் சார்பில் வைகை ஆற்றில் உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டது .
வைகை ஆறு தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உற்பத்தியாகி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது.
சுமார் 295 கிலோ மீட்டர் பயணிக்கும் வைகை ஆற்றங்கரையில் தேனி, மதுரை, ராமநாதபுரம் பகுதியில் கழிவுநீர் கலக்கிறது. மழைநீர் வடிகால் அனைத்தும் கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டன இருப்பினும் அபவபது சில சமூக அருளர்கள் வைகை ஆற்றை சுத்தம் பண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வைகை ஆற்றைக் காக்க மண்ணின் மைந்தர்களே வருகை எனும் தலைப்பில் வைகை நிதி மக்கள் இயக்கம் சமூக ஆர்வலர் ஆகியோர் வைகை ஆற்றின் சிறப்புகளை மாணவர்களுக்கு மத்தியில் எடுத்துரைத்து விழிப்புணர்வு செய்தனர்.
இதில் கல்லூரி மாணவ,மாணவர்கள் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வைகை ஆற்றை புனிதப்படுத்த வேண்டும் என பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டு வைகை ஆற்றில் கிடந்த குப்பைகளை அகற்றினர்.
சமூக ஆர்வலர்களும் மாணவர்களும் வைகை ஆற்றை சுத்தும் படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது போல் மாநகராட்சி நிர்வாகமும், அரசும் முன்வந்து தூய்மை படிந்து மாசுபட்டு கிடக்கும் ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வரும் வைகை ஆற்றை மீட்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலரும் அரசருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.