மாணவர்களையும், பெற்றோர்களையும் தலைமை ஆசிரியர் அவமரியாதை செய்வதாக கூறி வகுப்புகளை புறக்கணித்துவிட்டு பள்ளி மாணவர்கள் வெளிநடப்பு
நெல்லை மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி என்பது திருநெல்வேலி மாநகராட்சியிலுள்ள மேலப்பாளையத்தில் அமைந்துள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் ஒன்றாகும். இந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புகள் வரை வகுப்புகள் உள்ளது . இந்தப் பள்ளியில் ஆண், பெண் என்று இரு பாலரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமையாசிரியராக தலைமை ஆசிரியர் MK மீரான் மைதீன்
இருந்து வருகிறார்
இந்த நிலையில் மாணவர்களையும், மாணவர்களை காரணம் இல்லாமல் சஸ்பெண்ட் செய்வதாகவும் மாணவர்கள் கூட்டம் சாட்டுகின்றன மேலும் சீரழிந்து போங்கள் என்று தலைமை ஆசிரியர் சாபம் விடுவதாகவும் , சில நாட்களுக்கு முன்பு தேர்வு எழுத வந்த மாணவர்களை வேண்டுமென்றே தேர்வு எழுத விடாமல் வைத்து. தேர்வில் தோல்வியடைய செய்து விட்டதாகவும் , இதைக் கேட்க வந்த பெற்றோர்களையும் அவமரியாதையாக பேசுவதாகவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்தும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் போராட்டம் நடத்தினர்
தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவகுமார் மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் தற்பொழுது பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகிறார்
மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது