in

டெரகோட்டா பொம்மைகள் செய்து அசத்திய புதுச்சேரி வருகை புரிந்த மாணவ மாணவிகள்


Watch – YouTube Click

டெரகோட்டா பொம்மைகள் செய்து அசத்திய புதுச்சேரி வருகை புரிந்த மாணவ மாணவிகள்

 

கல்வி சுற்றுலா மற்றும் இறுதி ஆண்டு படிப்பிற்கு பயிற்சி பெற புதுச்சேரி வருகை புரிந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு டெரகோட்டா பொம்மைகள் செய்வது குறித்த பயிற்சி.

களிமண்ணை பிசைந்து டெரகோட்டா பொம்மைகள் செய்வது புதுவித அனுபவமாக உள்ளது, மாணவ மாணவிகள் பேட்டி.

சென்னை நேஷனல் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், சண்டிகர், உத்திரபிரதேசம், உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இவர்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அடையாளமாக திகழக்கூடிய கலாச்சாரங்களை பற்றி தெரிந்து கொள்கின்றனர்.

அந்த வகையில் நேஷனல் கல்லூரியை சேர்ந்த சுமார் 35க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி சுற்றுலாவாக மற்றும் இறுதி ஆண்டு பயிற்சிக்காக புதுச்சேரி வருகை புரிந்தனர்.

அவர்கள் புதுச்சேரி வில்லியனூர் டெரகோட்டா பொம்மைகள் செய்யும் மையத்தில் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டனர்.

இதில் பத்மஸ்ரீ விருது பெற்ற டெரகோட்டா கலைஞர் முனுசாமி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். அதில் சிறிய விநாயகர் சிலை முதல் 15 அடி உயரம் அய்யனார் சிலை வரை செய்வது குறித்து பயிற்சி அளித்தார்.

மேலும் விலங்குகள் மற்றும் பறவைகள் மலர்கள் உள்ளிட்டவைகளை செய்வது குறித்து செய்முறை பயிற்சி அளித்தார் மாணவ மாணவிகளும் டெரகோட்டா பொம்மையை உருவாக்கி மகிழ்ச்சி அடைந்தனர்.

இது குறித்து மாணவர்கள் கூறும் பொழுது..

ஒவ்வொரு ஆண்டும் இறுதி ஆண்டு படிக்கும் பொழுது ஒவ்வொரு மாநிலத்தின் கலாச்சாரங்களை பற்றி தெரிந்து கொள்வது வழக்கம் அதன்படி புதுச்சேரியின் அடையாளமாக திகழக்கூடிய டெரகோட்டா பொம்மை எப்படி உருவாக்குவது என்பதை தெரிந்து கொண்டோம் இதில் 1அடி விநாயகர் சிலை முதல் 15 அடி உயரம் வரை உள்ள அய்யனார் சிலை வரை செய்வது எப்படி என்று உருவாக்கி கொடுத்தார்கள் களிமண்களை பிசைந்து அதில் பொம்மைகள் உருவாக்குவது இதுவே எங்களுக்கு முதல் முறை இது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அது மட்டும் இல்லாமல் களி மண்ணில் டெரகோட்டா பொம்மைகளை உருவாக்குவது ஒரு மிகச்சிறந்த புதிய அனுபவத்தை ஏற்படுத்துவதாக மாணவ மாணவிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மேலும் இந்த பயிற்சி குறித்து டெரகோட்டா கலைஞர் முனுசாமி கூறும் போது…

கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பயிற்சிக்காக வருகை புரிந்து டெரக்கோட்டா பொம்மைகளை உருவாக்குவது குறித்து தெரிந்து கொள்வார்கள் அந்த வகையில் மாணவர்களுக்கு விநாயகர் வாத்து யானை குதிரை தாமரை உள்ளிட்ட பல்வேறு பொம்மைகளை உருவாக்கி விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவ மாணவிகளும் அதனை ஆர்வமுடன் கற்றுக் கொண்டனர் என்று குறிப்பிட்டார்.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி சூரியன் எப் எம் சார்பில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் இசை கச்சேரி நடைபெற்றது

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் சுதந்திரமாக நடக்காது அதிமுக பொதுச்செயலாளர் இ பி எஸ் மதுரையில் பேட்டி