in

போலி உயில் தயாரிப்பில் சப் – ரிஜிஸ்டர் அலுவலக ஊழியர்களுக்கும் பங்கு.கைதான மூவர் தடுக்கிடும் தகவல்கள்.

போலி உயில் தயாரிப்பில் சப் – ரிஜிஸ்டர் அலுவலக ஊழியர்களுக்கும் பங்கு.கைதான மூவர் தடுக்கிடும் தகவல்கள்.

புதுச்சேரியில் போலி உயில் தயாரிப்பில் 3 குழுக்கள் தனித்தனியாக பிரிந்து ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுப்பட்டவர்கள் பட்டியல் சி.பி.சி.ஐ.டி., வசம் சிக்கியுள்ளதால் புதுச்சேரியில் பரபரப்பு.

புதுச்சேரி காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 50 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணம் தயாரித்து அபகரிக்கப்பட்டது. இச்சம்பவத்திற்கு பிறகு, பத்திர பதிவு துறையில் உள்ள உயில்களை மறு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அப்போதைய சப்கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். உழவர்கரை சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் மட்டும் கடந்த 1980 முதல் 2001ம் ஆண்டு வரை பதிவான பல உயில்கள் திருத்தி போலி பத்திரம் தயாரித்து நிலம் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

உழவர்கரை சப்ரிஜிஸ்டர் பாலமுருகன் அளித்த புகாரின்பேரில், 9 உயில் ஆவணங்களில் கைரேகை மற்றும் கையொப்பம் புத்தகத்தில் திருத்தம் செய்து போலி பத்திரம் தயாரித்து மோசடி நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முதல் உயிலை ஆய்வு செய்தபோது, சாரம் கவிக்குயில் நகரில் 3600 சதுர அடி நிலத்திற்கு, போலியான ஆவணம் தயாரித்து சென்னையைச் சேர்ந்த சித்ரா மூலம் விற்பனை செய்யப்பட்டது. சித்ராவை கடந்த 7 ம் தேதி கைது செய்த போலீசார், போலி பத்திரம் தயாரிக்க உதவிய ராகவேந்திரா நகர் ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை எம்.டி.எஸ்., ஊழியர் ரவிச்சந்திரன், லாஸ்பேட்டை, குறிஞ்சி நகர் விரிவாக்கம், அன்னை நகர் 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்த புரோக்கர் சித்தார்த் (எ) சித்தானந்தன், பட்டானுார், ஸ்ரீராம் நகர், புது நகரைச் சேர்ந்த புரோக்கர் மஞ்சினி, பத்திர எழுத்தர் தேங்காய்த்திட்டு அருள்பெருள் ஜோதி நகர் மணிகண்டன், ஆகியோரை கடந்த 22ம் தேதி கைது செய்தனர்.

இதில் மணிகண்டன், மஞ்சினி, சித்தானந்தன் ஆகிய 3 பேரை 6 நாள் கஸ்டடி எடுத்து போலீசார் விசாரித்தனர். அப்போது, உயில் புத்தகத்தில் மாற்றம் செய்ய உதவிய உழவர்கரை சப்ரிஜிஸ்டர் அலுவலக செக்யூரிட்டி, கம்பளிக்காரன்குப்பம் உத்திரவேலுவை கைது செய்தனர்.

தொடர் விசாரணையில் மூவரும் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.உழவர்கரை சப்ரிஜிஸ்டர் அலுவலகத்தில் மட்டும் இன்றி புதுச்சேரி முழுதும் உள்ள பத்திர பதிவு அலுவலகங்களில் போலி ஆவணங்கள் தயாரிப்பில் 3 குழுக்கள் தனித்தனியாக செயல்படுவது தெரியவந்தது. உயில்களை கிழித்து மாற்றுவது, போலி உயில் மற்றும் பத்திரம் தயாரிப்பு, போலி பத்திரம் மூலம் நிலத்தை விற்பனை செய்வது என 3 குழுக்கள் தனித்தனியாக செயல்பட்டு ஏராளமான சொத்துக்களுக்கு உயில்களை மாற்றி விற்பனை செய்துள்ள தகவல்களை தெரிவித்துள்ளனர். இந்த மோசடியில் பத்திர பதிவு அலுவலகங்களில் பணியாற்றி வரும் பல ஊழியர்களும், புரோக்கர், பத்திரம் எழுத்தர்களுக்கு தொடர்பு இருப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால் போலி உயில் வழக்கில் வரும் வாரங்களில் அரசு ஊழியர்களும் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

What do you think?

புதுச்சேரி…பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி.

ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ஆசிரியர் தின வாழ்த்து