in

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு தேர்தல் பிரச்சாரத்தை கையாண்டதில்லை- துரை வைகோ பேட்டி

இந்திய வரலாற்றில் இப்படி ஒரு தேர்தல் பிரச்சாரத்தை கையாண்டதில்லை. – திருச்சியில் துரை வைகோ பேட்டி

 

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.

இன்னலில் இன்று மதிமுக முதன்மைச் செயலாளர் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் துறை வைகோ பாகுபதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை சிசிடிவி காட்சிகள் மூலம் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில்…,

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் நடந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளுடன் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பாதுகாப்பில் உள்ளனர். திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சிசிடிவி பிரச்சனைகள் இல்லை நன்றாக இயங்குகிறது தமிழகத்தில் ஈரோடு உள்ளிட்ட ஒரு சில இடங்களில் சிசிடிவி இயங்கவில்லை என கூறுகின்றனர்.

பிரதமர் என்ற தகுதியில் பிரதமர் மோடி பேசவில்லை, பிரிவினை உண்டுப்படுத்தும் நோக்கில், ஜாதி மதங்களை வைத்து வாக்கு சேகரித்து பேசுவது இதுவரை இந்தியா வரலாற்றில் இப்படி ஒரு பிரச்சாரத்தை கையாண்டதில்லை. இதுவரை பிரதமர் மோடி இப்படி பேச கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் இதுவரை கூறவில்லை.

தென்னக ரயில்வேயில் தொழிலாளர்கள் வடநாட்டவர்கள் அதிகம் இருப்பதால் பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.

வடநாட்டவர்கள் தமிழ் கற்று பணி செய்வதை விட தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

பாஜகவினர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர். அதில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு மட்டும் சாதகமாக இருப்பது போல பேசி வருகின்றனர்.

இது பாஜகவினரின் தோல்வி பயத்தை காட்டுகிறது. இந்தியா கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும். பிரதமர் மோடிக்கு வயதாகி விட்டது பிரதமர் மோடிக்கு பிறகு அமித்ஷா அந்த கட்சிக்கு தலைமை ஏற்பார் ஆனால் இந்தியா கூட்டணி தான் வெற்றி பெறும்..

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது நீதிக்கு கிடைத்த வெற்றி இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி அவரது கைது நாங்கள் கண்டிக்கிறோம் சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் மிகவும் வீரியத்துடன் அரவிந்த் கெஜ்ரிவால் செயல்படுகிறார் என கூறினார்.

What do you think?

வயலில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த இரண்டு பெண்கள்

எனது கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் – திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் மனைவி பேட்டி