கூலியின் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த சன் Pictures
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள, அதிரடித் திரைப்படமான ‘கூலி’, படத்தின் ரிலீஸ் தேதியை சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்திருக்கிறது.
கடந்த மாதம் படபிடிப்பை முடித்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த படத்தை உருவாக்கிய அனுபவம் என்றென்றும் ஒரு மறக்கமுடியாத நினைவாக இருக்கும் என்று தெரிவித்தார்.
கூலி படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரசிகர்கள் சமூக ஊடகங்களில் உற்சாகத்தில் மூழ்கினர். ஒரு ரசிகர் லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்து தெரிவித்து, 50வது ஆண்டில்…. அடிஎடுத்து வைத்திருக்கும் ரஜினிகாந்தின் இந்த படத்தை சிறப்பானதாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
சிலர், வார் 2 படத்துடன் பாக்ஸ் ஆபிஸில் மோத உள்ளதை சுட்டிக்காட்டி. “தலைவருக்கு வழி விடுங்கள்!” என்று வேறுப்பேத்தி இருகின்றனர்.
பிரமாண்டமாக உருவாக இருக்கும் கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா உபேந்திரா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
மேலும் Jailer படத்தில் தமன்னா போட்ட ஆட்டத்தைப் போல் பூஜாஹெட்கே ஒரு பாடலுக்கு சம குத்தாட்டம் போட்டிருக்கிறார் . கூலி ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகும் சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்திருக்கிறது.