in

தஞ்சை முதல் முறையாக கிராமத்தில் Sunday Happy Village Street நிகழ்வு

தஞ்சை முதல் முறையாக கிராமத்தில் Sunday Happy Village Street நிகழ்வு

 

தஞ்சையில் முதல் முறையாக நடந்த Sunday Happy Village Street நிகழ்வில் . தப்பாட்ட இசைக்கு குத்தாட்டம் போட்ட முதியவர், அம்மிக்கல்லா நான் இருக்கேன் மஞ்சள் அறைக்க நீ வாரியா உள்ளிட்ட திரை இசை குத்தாட்ட பாடலுக்கு ஆட்டம் போட்ட கிராமத்து வாண்டுகள், கரகாட்டம் என ஒலி அதிர்வுகளால் கிராமமே களை கட்டி காணப்பட்டது.

தஞ்சை அடுத்த குலமங்களம் கிராமத்தில் முதல் முறையாக Sunday Happy Village Street நிகழ்வு நடந்தது.

திவாஸ் மகளிர் அமைப்பு சார்பில் நடந்த இந்த விழாவில் நையாண்டி மேளம், தப்பாட்டம், கரகாட்டம், கிராமத்து வாண்டுகளின் ஆட்டம் என கிராமமே களை கட்டியது.

அண்ணாத்த ஆடுறார் பாடல் தப்பாட்ட இசைக்கு கிராமத்து முதியவர் புலி வேஷம் போடாமல் புலியாட்டம் ஆடி அசத்தினார்.

அம்மிக்கல்லா நான் இருக்கேன் மஞ்சள் அறைக்க நீ வாரியா உள்ளிட்ட திரை இசை குத்தாட்ட பாடல்களுக்கு கிராமத்து வாண்டுகள் ஆட்டம் போட்டு மகிழ்ந்தனர்.

விழாவில் கிராமத்தில் வசிக்கும் ஏழ்மையான 30 பெண்களுக்கு தலா 5 கோழி குஞ்சுகள் விலையில்லாமல் வழங்கப்பட்டன.

Sunday Happy Village Street நிகழ்வால் குலமங்களம் கிராமமே விழாக்கோலம் பூண்டு களைக்கட்டி காணப்பட்டது.

What do you think?

நெம்மேலி ஸ்ரீ பாலமுருகன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

கணிதம் குறித்த கேள்விக்கு அசாத்தியமாக பதில் அளிக்கும் நான்கு வயது பெண்குழந்தை‌