in

ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் பெயர்!


Watch – YouTube Click

ஹால் டிக்கெட்டில் சன்னி லியோன் பெயர்!

கடந்த பிப்ரவரி 17 -ஆம் தேதி சனிக்கிழமையன்று, உத்தரபிரதேச போலீஸ் கான்ஸ்டபிள் ஆட்சேர்ப்பு தேர்வுக்கான அனுமதி சீட்டில் நடிகை சன்னி லியோன் மற்றும் அவரது பெயரின் இருந்த அந்த சீட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவியது.

அதில் ” “சன்னி லியோன்” என்று எழுதப்பட்டு இருப்பதையும் பிப்ரவரி 17 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12:05 மணி வரை கண்ணாஜ் ஸ்ரீமதி சோனஸ்ரீ நினைவு பெண்கள் கல்லூரியில் தேர்வு நடைபெறும் என்று அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

சன்னி லியோன் புகைப்படம் இடம்பெற்றது குறித்து தேர்வு அதிகாரிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவலை கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். சன்னி லியோன் புகைப்படம் மற்றும் பெயர் வைத்து வைரலான அந்த ‘ அட்மிட் கார்டு’ போலியானது. அதன்பிறகு உத்தரப்பிரதேச காவல்துறை ஆட்சேர்ப்பு (UPPRB) அதிகாரி, இந்த விவகாரம் குறித்து பேசி விளக்கமும் அளித்தார்.

இது குறித்து பேசிய அவர் ” சன்னி லியோன் புகைப்படம் மற்றும் பெயர் வைத்து வைரலான அந்த ‘ அட்மிட் கார்டு’ போலியானது. இந்த தேர்வுக்காக தேர்வெழுத விண்ணப்பத்தின்போது, ஒரு விண்ணப்பதாரரா அவருடைய புகைப்படங்களுக்கு பதிலாக தவறான புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது” என கூறியுள்ளார்.

இதற்கிடையில், சமீபத்தில் ஒரு வீடியோவில், தர்மேந்திர சிங் என்ற நபர், தவறான ஹால் டிக்கெட்டைப் பெற்றதைப் பற்றித் பேசியதாவது “நான் குல்பஹாரைச் சேர்ந்தவர் என்னுடைய பெயர் தர்மேந்திர சிங். நான் முன்னதாக உ.பி. போலீஸ் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தேன். என்னுடைய பெயர் மற்றும் புகைப்படங்கள் மற்றும் ஆதார் அட்டை எண் உள்ளிட்ட சரியான சான்றுகளை வழங்கியும் இருந்தேன்.

ஆனால், அட்மிட் கார்டைப் பெற்றபோது, அதில் சன்னி லியோனின் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த தேர்வு எழுதி போலீஸ் அதிகாரியாகி மக்களுக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கடந்த இரண்டு வருடங்களாக இந்தத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்தேன். அட்மிட் கார்டில் எனது பெயர் மற்றும் புகைப்படங்கள் மாற்றப்பட்ட காரணத்தால் என்னால் இந்த தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது. இதனை பற்றி சிலரிடம் நான் கேட்டு விசாரித்தேன் இப்போது ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்கள். எனது தேர்வை நடத்த உத்தரபிரதேச முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

கோபத்தில் அரசியலுக்கு வரவில்லை கமல்

மக்கள் பிரதிநிதியாவதே உள் விருப்பம் தமிழிசை பேட்டி