in

அகரம் பவுண்டேஷனின் புதிய கட்டிடத்தை திறந்த சூர்யா


Watch – YouTube Click

அகரம் பவுண்டேஷனின் புதிய கட்டிடத்தை திறந்த சூர்யா

 

சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேஷனின் புதிய அலுவலகம் நேற்று திறக்கப்பட்டது.

இந்த பவுண்டேஷன் மூலம் ஏராளமான ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கொடுக்கிறார் சூர்யா. அகரம் பவுண்டேஷன் திறப்பு விழாவில் பேசிய சூர்யா கஜினி படதின் வெற்றி..இக்கு பிறகு மக்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன் அந்த விதை தான் இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.

நன்றாக படிக்கும் மாணவர்கள் பொருளாதார நெருக்கடியால் படிக்க முடியாமல் சிரம்மபடுகின்றனர் என்று இயக்குனர் ஞானவேல் சொன்னது தான் அகரம் தொடங்குவதற்கு காரணமாக இருந்தது .

முதன் முதலில் அகரத்தை பத்துக்கு பத்து அறையில் தான் தொடங்கினேன் அதன் பிறகு இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் நடந்தது அதன் பிறகு எனது தந்தை சிவகுமார் ஒரு இடம் கொடுத்தார்.

2010 ஆம் ஆண்டு விதை என்ற திட்டத்தை தொடங்கினோம் அரசு பள்ளியில் படித்த மாணவ மாணவிகள் கல்லூரியில் சேர்க்கும் திட்டமே விதை. அகரம் பவுண்டேஷ..னுக்காக கட்டப்பட்டிருக்கும் இடம் படிப்புக்காக வந்த நன்கொடையில் வாங்கிய இடம் இல்லை.

எனக்கு கிடைத்த வருமானத்தில் கட்டப்பட்டது. நன்கொடையாக வரும் ரூபாய் அனைத்தையும் கல்விக்காக மட்டுமே நாங்கள் பயன்படுத்துகிறோம். நான் சொந்த வீடு கட்டிய போது இருந்த சந்தோஷத்தை விட அகரம் அலுவலகத்தை திறக்கும் போது அதிக சந்தோஷமாக இருக்கிறது என்று எமோஷனலாக பேசினார் நடிகர் சூர்யா.


Watch – YouTube Click

What do you think?

லவ் டுடே .. ஹிந்தி ரீமேக் செம பிளாப்

SK 23 Title Released …?