in

ரஜினிக்காக கங்குவா ரிலீஸ்…சை தள்ளி வைத்த சூர்யா


Watch – YouTube Click

ரஜினிக்காக கங்குவா ரிலீஸ்…சை தள்ளி வைத்த சூர்யா

அக்டோபர் பத்தாம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் வேட்டையனும் சூர்யா நடித்த கங்குவாவும் ஒரே நாளில் மோதுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில்.

தற்போது கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மூத்த நடிகர்களின் படம் தான் முதலில் ரிலீஸ் ஆக வேண்டும் கங்குவா ஒரு குழந்தை அது எப்பொழுது பிறக்கிறதோ அப்பொழுது தான் அதற்கு பிறந்தநாள் என்று கோவையில் நடந்த கார்த்திக்கின் மெய்யழகன் பட விழாவில் கலந்து கொண்ட சூர்யா ரஜினி படத்துக்காக தனது படத்தை தள்ளி வைப்பதாக நாசுக்காக கூறியுள்ளார்.

ஒரே தேதியில் இரண்டு படம் ரிலீஸ் ஆனால் ரஜினிக்கு வசூல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் என்று கங்குவா போட்டியிலிருந்து விலகி விட்டது. இது பற்றி ரஜினிகாந்திடம் மூத்த நடிகர்களின் படம் தான் முதலில் வெளியாக வேண்டும் என்று சூர்யா கூறியிருக்கிறாரே என்று நிருபர்கள் கேட்ட போது அவரது அன்புக்கும் பாசத்துக்கும் என்னுடைய நன்றி அவரது படமும் வெற்றி அடைய வேண்டும் என்று ரஜினி கூறியுள்ளார்.

மேலும் தற்பொழுது பரப்பரப்பாக எல்லோராலும் விவாதிக்கப்பட்டு வரும் ஹேமா கமிட்டி தமிழ் திரை உலகிலும் வரவேண்டும் என்று குரல்கள் வலுக்கிறது அது பற்றி உங்கள் கருத்து என்ன என்று ரஜினிிடம் கேட்டபோது ஹேமா கமிட்டி பற்றி எனக்கு எதுவும் தெரியாது மன்னிக்கவும் என்று கூறிவிட்டார்.

ஆனால் குட்டி பத்மினி…யிடம் ஹேமாகமிட்டி பற்றி கேட்ட போது நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன் அது வெளிவந்தவுடன் பல முன்னணி தமிழ் நடிகர்களின் உண்மை முகம் வெளிவுலகத்துக்கு தெரியும் என்றார்.


Watch – YouTube Click

What do you think?

தலைவர் பேசாமல் நான் கருத்து வெளியிட முடியாது….நடிகர் மம்முட்டி

GOAT’ முதல் விமர்சனம் UK தணிக்கையிலிருந்து …..பிளாக் பஸ்ட்டர் உறுதி