in

திருச்சி மாநகராட்சியில் ரூ.73 லட்சம் உபரி பட்ஜெட் தாக்கல்


Watch – YouTube Click

திருச்சி மாநகராட்சியில் ரூ.73 லட்சம் உபரி பட்ஜெட் தாக்கல்

திருச்சி மாநகராட்சியில்  2024 25 ம் ஆண்டுக்கான நிதிநிலை பட்ஜெட்டை மேயர் மு. அன்பழகன் தாக்கல் செய்தார்.

அதன்படி ரூ. 1023 கோடியே 15 லட்சம் வரி வருவாய் மற்றும் இதர வருவாய் மூலம் திரட்டப்பட உள்ளதாகவும், அதில் ரூ.1022 கோடியே 42 லட்சம் செலவிடப்பட உள்ளதாகவும் மேயர் தெரிவித்தார்.

அதன்படி ரூ.73 லட்சம் உபரி பட்ஜெட் இந்த முறை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த ஆண்டு ரூ.89 லட்சம் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருச்சி மாநகராட்சியின் 2024 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையினை நிதி குழு தலைவர் முத்துச்செல்வம் முழுமையாக வாசித்தார்.

திருச்சி விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்ட பின்னர் மென்பொருள் தொடர்பான பணியாளர்கள் மற்றும் உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் யாத்திரிகர்கள் மற்றும் வியாபார நோக்கில் வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும் அவர்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டியதை கருத்தில் கொண்டும் இந்த 2024-25 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்குள்
குளிர்சாதன வசதிகளுடன் கூடிய பயணிகள் காத்திருக்கும் கூடம் கட்டும் பணிக்கு ரூ.16 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்த புள்ளிகள் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த சந்தை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள ரூ. 161.70 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து நிர்வாக அனுமதி பெறுவதற்கு நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது உரிய அனுமதி மற்றும் மானியம் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.

திருச்சி கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் 40 ஆயிரத்து 888 சதுர அடி பரப்பளவில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு கட்டிடம் கட்டும் பணியினை மேற்கொள்வதற்கு ரூ. 41 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து நிர்வாக அனுமதி பெறுவதற்கு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது உரிய அனுமதி மற்றும் மானியம் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.

இதைப் போன்று மாநகராட்சி மைய அலுவலகத்திற்குள் கூடுதல் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கு ரூ.41.37 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பஞ்சப்பூர் முதல் கோணக்கரை கரூர் புறவழிச்சாலை வரை கோரையாறு மற்றும் உய்யக்கொண்டான் ஆற்று கிழக்குக்கரை பகுதியில் புறவழிச் சாலை 3 தொகுப்புகளாக அமைக்கும் பணிக்கு ரூ. 310 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் அனுமதி பெறுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் புத்தூர் ஈவேரா சாலை பகுதியில் ஐந்தாவது மண்டல அலுவலகம் கட்டும் பணிக்கு ரூ. 14.10 கோடியில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசின் நிர்வாக அனுமதி மற்றும் மானியம் பெறுவதற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
திருச்சி கொட்டப்பட்டு குளம் நீர் நிலையில் நடைபாதை உணவகம் செல்பி பாயிண்ட் பென்சிங் உயர் மின் கோபுர விளக்கு மற்றும் கழிவறை வசதியுடன் கூடிய பொழுதுபோக்கு தளமாக மேம்படுத்த ரூ9. 90 கோடிக்கு மதிப்பீடு தயார் செய்யப்பட்டு நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு செய்து தரக் கோரி நகராட்சி நிர்வாக இயக்குனருக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி மற்றும் மானியம் பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருச்சி குழுமணி ரோடு முதல் தியாகராஜ நகர் வரை ஆர் சி சி பாலம் கட்டும் பணியினை மேற்கொள்ள ரூ. 2.52 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குனர் நிர்வாக அனுமதி மற்றும் மானியம் பெறுவதற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

உழவர் சந்தை எதிரே பெருநகரங்களில் உள்ளவாறு உணவுத் தெரு அமைக்கும் பணியினை மேற்கொள்ள ரூ. 2.25 கோடிக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குனர் நிர்வாக அனுமதி மற்றும் மானியம் பெறுவதற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்று பணிகள் மேற்கொள்ளப்படும்.
திருச்சி மாநகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை முறையாக கையாண்டு மறு பயன்பாடு செய்யும் வகையில் எஸ்பிஎம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 35 கோடி மதிப்பீட்டில் நாள் ஒன்றுக்கு சுமார் 100 மெட்ரிக் டன் கையாளும் திறன் கொண்ட பயோ எரிவாயு உற்பத்தி நிலையம் அமைத்திட விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு முன்மொழிவுக்கான கோரிக்கை நிலையில் உள்ளது.

மேலும் மக்காத குப்பைகளை முறையாக கையாண்டு அப்புறப்படுத்த மேற்கண்ட திட்டத்தின் கீழ் ரூ. 35 கோடி மதிப்பீட்டில் 200 மெட்ரிக் டன் கையாளும் திறன் கொண்ட பொருள் மீட்பு வசதி மையம் அமைத்திட விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு முன்மொழிவுக்கான கோரிக்கை கோரப்படும் நிலையில் உள்ளது.

ரூ. 17 கோடியே 68 லட்சத்தில் 10 இடங்களில் புதிதாக மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் கட்டுவதற்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு நகராட்சி நிர்வாக இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் புதை வடிகால் வசதிகள் அமைக்கும் பணிகள் நான்கு கட்டங்களாக நடந்து வருகிறது. இந்த திட்டங்களில் உட்படுத்தப்படாத பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு விடுபட்ட பகுதிகளுக்கு ஐந்தாம் கட்டமாக புதை வடிகால் வசதிகள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த சந்தை அமைக்கப்பட்ட பிறகு காந்தி மார்க்கெட்டில் புதிதாக அரசு அலுவலகங்களுடன் கூடிய சில்லறை வியாபாரிகளுக்கான வணிக வளாகம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசு மானியம் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் மற்றும் காந்தி மார்க்கெட் அருகில் உள்ள வாழைக்காய் சந்தையில் புதிதாக வணிக வளாகம் கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசு மானியம் பெற்றுக் கொள்ளப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள சாலைகளில் சுமார் 83 கிலோமீட்டர் நீளத்திற்கு மண் சாலைகளை படிப்படியாக தார் சாலைகளாகவும் சிமென்ட் காங்கிரீட் சாலைகளாகவும் பேவர் பிளாக்குகள் பொருத்தப்பட்ட சாலைகளாகவும் மாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது இந்த சாலை பணிகளை ரூ. 50 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சியின் 65 வார்டுகளிலும் சுமார் 52 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிதாக மழை நீர் வடிகால் கட்டுதல் மற்றும் நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் கட்டுதல் போன்ற பணிகளை ரூ. 32 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.


Watch – YouTube Click

What do you think?

தமிழக சட்டபேரவையில் தமிழ் மொழி குறித்து உறுதிமொழி

கோபத்தில் அரசியலுக்கு வரவில்லை கமல்