நடிகைகளுக்கு வீட்டில் பார்ட்டி வைத்த சூர்யா ஜோதிகா
நடிகர் விக்ரமுக்கு பிறகு அதிகம் ஹோம் ஒர்க் பண்ணி தன்னை வருத்தி நடிக்கும் நடிகர் சூர்யா இவர் நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் இவர் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
தற்பொழுது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்திலும் நடித்து வருகிறார். இவரும் இவரது காதல் மனைவி ஜோதிகாவும் இணைந்து கோலிவுட் நடிகைகளுக்கு திடீர் பார்ட்டி வைத்திருக்கின்றனர்.
விருந்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருக்கின்றனர். இந்த திடீர் விருந்துக்கான காரணம் என்னவென்று வெளியிடவில்லை.
இந்த விருந்தில் நடிகை திரிஷா, ராதிகா ரம்யா கிருஷ்ணன் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா தொலைக்காட்சி தொகுப்பாளர்களான டிடி, ரம்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.