in

காரைக்கால் ஸ்ரீ சிவலோகநாத சுவாமி தேவஸ்தானத்தில் சூரிய பூஜை விழா

காரைக்கால் ஸ்ரீ சிவலோகநாத சுவாமி தேவஸ்தானத்தில் சூரிய பூஜை விழா

 

காரைக்கால் மாவட்டம் தலத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சிவலோகநாத சுவாமி தேவஸ்தானத்தில் 02வது நாள் சூரிய பூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்கால் மாவட்டம் தலத்தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமி அம்பாள் உடனுறை ஸ்ரீ சிவலோகநாத சுவாமி தேவஸ்தானத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் ஒரு வார காலம் காலை நேரத்தில் சூரியன் ஒளி இறைவன் மீது நேரடியாக விழும்.

ஸ்ரீ சூரியன் இத்தல இறைவனை சிறப்பு பூஜை செய்து வழிபடுவதாக கருதப்படும் இந்நிகழ்ச்சி சூரிய பூஜை விழாவாக ஒரு வாரம் கொண்டாடப்படுவது வழக்கம். இவ்வருடம் சூரிய பூஜை விழா 02வது நாளான இன்று காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், வெள்ளி அங்கி சாற்றி மகாதீபாராதனையும் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து காலை சூரிய ஒளி இறைவன் மீது விழுந்தது.அப்போது மூலவர் ஸ்ரீசிவலோகநாதருக்கு விசேஷ பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி அம்பாளுக்கும் மகாதீபாராதனை நடைபெற்றது. இறைவன் மீது சூரிய ஒளி நேரடியாக விழும் காட்சியினை ஏராளமான பக்தர்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

அழகிய மன்னாா் ராஜகோபால சுவாமி திருக்கோவிலில் பங்குனி பிரம்மோஸ்தவ 5ம் நாள் இரண்டு கருட சேவை

ரியல் எஸ்டேட்டில் பணத்தை போட்ட சஞ்சனா கல்ராணி