சூர்யாவின் வெறியாட்டம்…. கங்குவா Movie Review and Theatre
Response
கங்குவா படத்திற்கு கடைசி நேரத்தில் வந்த சோதனையை முறியடிச்சி 20 லட்ச ரூபாயை செலுத்தி ஞானவேல் ராஜா கங்குவா படத்தை திட்டமிட்டபடி வெளியிட்டிருகிறார்.
இன்று உலகம் முழுவதும் சூர்யா, திஷா பாட்னி, பாபி தியோல் நடிப்பில் சிறுத்தை சிவா, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக இயக்கிய கங்குவா படம் பிரம்பாண்டமாக தியேட்டர்களில் இன்று வெளியாகி இருக்கிறது.
அதிகாலை சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதித்த நிலையில் மற்ற மாநிலங்களிலும் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது, வெளிநாடுகளிலும் அதிக தியேட்டர்கலில் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது.
கங்குவா படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ரெஸ்பான்ஸ்சை பார்போம். சூர்யாவின் வெறியாட்டதை தியேட்டர்ல போய் பாருங்க, பிரம்மாண்டமான காட்சி அமைப்பு, கிராபிக்ஸ்….இன்னு நினைக்க வைக்காத அளவிற்கு சூரியா அதற்கான உழைப்பை கொடுத்திருக்கிறார் ஃபேண்டஸி ஹீரோ எப்படி சாதிக்கணுமோ எல்லாத்தையுமே தன் தலையில் சுமந்து இருக்கிறார்.
வெல்டன் சூர்யா, ஆரம்பத்துல ஒரு சில சீன்கலில் Siva வாடை அடிச்சது உண்மைதான். ஆனால் கங்குவா போஷன் ஆரம்பித்ததும் சிவா மறைஞ்சிட்டார், நிறைய நடிகர்கள் இருக்காங்க ஆனா அவங்களுக்கு கொடுத்த கெட்டப்பால யாரையுமே அடையாளம் காட்ட முடியாத அளவிற்கு அற்புதமாக மேக்கப் போட்டு இருக்காங்க.
போஸ் வெங்கட், பாபி தியோல் மிரட்டல் ஆன நடிப்பை கொடுத்து இருக்காங்க, காடு, மலை, கடல் போர்க்காட்சிகள் என்று எல்லாத்தையுமே பிரமாண்டமாகவும் அழகாகவும் ஒளி பதிவு செய்திருப்பது ஒலிப்பதிவாளரின் அபார திறமை மற்றும் பெரும்பலமாக படத்திற்கு அமைந்திருக்கிறது.
3D எலமெண்ட்ஸ் நிறைய இருக்கு இந்த படத்தை 2d மற்றும் 3d …யில் பார்க்கலாம். Siva is very well exhibited what he is capable of.
அவருக்கே உரிதான பில்டப் டயலாக் இருந்தாலும் படத்துக்கு செட் ஆயிருக்கு. இறுதியில் கொடுத்த ட்விஸ்ட் இரண்டாம் பாகத்துக்கான விறுவிறுப்பை எங்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் அருமையான ஃபான்டசி படைப்பு …ன்னு சொல்லலாம் . (Pride of Tamil Cinema) in this category we should encourage.
ஒட்டுமொத்த பட குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என்று ரசிகர்கள் கங்குவா…வை கொண்டாடிட்டு இருக்காங்க. ஐந்து ஆண்டுகள் கழித்து சூர்யா…வின் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆயிருப்பதாலும் படத்துக்கான ஹைப்ஸ் தாருமாற இருக்கு.
மேக்கப் ஆர்டிஸ்ட் வொர்க் இசை என்று எதிலுமே குறை சொல்ல முடியாத அளவிற்கு சிறுத்தை சிவா ஸ்கோர் செய்திருக்கிறார். நிகழ்கால காட்சிகள் என்ஜாய் செய்யும் வகையிலும் பீரியட் காட்சிகள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கு.
பாகுபலி, கே ஜி எஃப் போன்ற படங்களை மிஞ்சும் வகையில் கங்குவா உருவாகி இருக்கிறது. நாங்க எந்த படத்தை புகழ்ந்திருகோம். இந்த படத்துக்கு Positive Comments கொடுக்க..இன்னு வழக்கம்போல் ப்ளூ சட்டை மாறன் கங்குவா படத்தை கலாய்த்து தள்ளி இருக்காரு.
எதுக்காக படத்தில் இருப்பவர்கள் எல்லாம் இப்படி எமோஷனலா கத்துறாங்கன்னு தெரியல சேதமடைந்த செவி பாறைகளுடன் நான் படம் பார்க்க சென்றது தவறு. படம் பார்க்க செல்லும் போது லோடு லோடாக பஞ்சை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.
கங்குவா..இன்னு டைட்டில் வெச்சதற்கு பதிலாக கத்துவான்..இன்னு வெச்சி இருக்கலாம் இத்தனை வருடம் மெனக்கெட்டத்தை எல்லாம் பொட்டுன்னு போட்டு உடைசிட்டாரு ப்ளூ சட்டை மாறன்.