சுவட்சிதா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்க்கு நிதிவழங்கும் கோப்பினை நிறுத்தி வைத்த – ஆளுநர்
15 நாட்களுக்குள் குப்பையில்லாத பகுதியாக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மாற்றப்படும் என ஆணையர் எழில்ராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சுவட்சிதா கார்ப்பரேஷன் நிறுவனத்தில் கடந்து பத்து ஆண்டுகளாக குப்பைகள் வரப்பட்டு வருகின்றனர். ஆனால் சில மாதங்களாய் குப்பைகள் சரியாக வரவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.
இதனை சுட்டிக்காட்டி துணைநிலை ஆளுநர் அவர்களுக்கு நிதி வழங்கும் கோப்பினை நிறுத்தி வைத்துள்ளார். புதுச்சேரியில் குப்பைகளை இல்லாத நிலை உருவாக்கினால் மட்டுமே அந்த கோப்புக்கு அனுமதி கொடுப்பேன் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அதிகாரிகள் சுறுசுறுப்பு அடைந்துள்ளனர். நகராட்சி மற்றும் கொம்யூன் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி உடனடியாக குப்பையில் அகற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் ஆணையர் எழில்ராஜன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மன்னாதிபட்டு பொம்மை பஞ்சாயத்தில் 48 கிராமங்களும் 18 கிராம பஞ்சாயத்துகளும் உள்ளன. இங்கு குப்பைகள் சரியாக வரவில்லை என்றால் பொதுமக்களிடம் புகார் பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் இன்னும் 15 நாட்களுக்குள் 95 குப்பைகள் அகற்றப்படும் என்று ஆணையர் தெரிவித்தார்.