in

நாகையில் வேட்புமனு தாக்கலின் போது நடந்த சுவராஸ்யம்


Watch – YouTube Click

நாகையில் வேட்புமனு தாக்கலின் போது நடந்த சுவராஸ்யம்

 

தமிழகத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக நடைப்பெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20 ம் தேதி முதல் நடைப்பெற்று வருகிறது.

நாகை நாடாளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சிக்கு இணையாக சுயேட்சை வேட்பாளர்களும் போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் நாகை மாவட்டம் சிக்கல் அடுத்த ஆலங்குடியைச் சேர்ந்த சுப்ரமணியன் என்பவர் இன்று சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஜானி டாம் வர்கீஸ் வேட்புமனுவை பெற்றுக் கொண்டார்.

அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானி டாம் வர்கீஸ் வேட்பாளரை உறுதிமொழி பத்திரத்தை வாசிக்க சொல்ல வேட்பாளர் தயங்கி நின்றார். உடனே வேட்பாளர் கூட வந்த நபர் சார் ஒரு ஆப்ளிகேசன் சார் என கூறி வேட்பாளர் கண்ணாடியை வீட்டிலே வைத்துவிட்டு வந்துவிட்டார் அவருக்கு பதில் நான் படிக்கவா என கேட்க ஜானி டாம் வர்கீஸ் நான் படிக்கிறேன் அவரை வாங்கி படிக்க சொல்லுங்கள் என கூறி வேட்பாளரிடம் ஆண்டவன் ஆணையாக கூறுகீர்களா, இல்லை உளமாற கூறுகிறீர்களா என கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து அவர் உறுதி மொழியை படிக்க வேட்பாளர் அதை வாங்கி சொல்லி உறுதி மொழி எடுத்துக் கொண்டார்.

வேட்புமனுவின் போது சுயேட்சை வேட்பாளர் கண்ணாடியை வீட்டில் வைத்துவிட்டதாக கூறியது வேடிக்கையாக இருந்தது மட்டுமில்லாமல் அவருக்கு படிக்க தெரியாததால் அப்படி சொன்னார்களா என்ற கேள்வியும் எழுந்தது.


Watch – YouTube Click

What do you think?

லோகேஷ் கனகராஜ் இனி டைரக்ட் பண்ண மாட்டாரா???

நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்த்து இருக்கும் மதிமுகா