in

T. கேணிப்பட்டு ஸ்ரீ பவானி அம்மன் ஆலய கூழ் வார்த்தல் திருவிழா

T. கேணிப்பட்டு ஸ்ரீ பவானி அம்மன் ஆலய கூழ் வார்த்தல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் T. கேணிப்பட்டு கிராமத்தில் அருபாலித்து வரும் ஸ்ரீ பவானி அம்மன் ஆலய கூழ்வார்த்தல் திருவிழாவை முன்னிட்டு மூலவர் ஸ்ரீ பவானி அம்மன் சந்தன காப்பு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து நண்பகல் 12 மணி அளவில் கூழ் வார்த்தல் திருவிழா என்னும் சாகை வார்த்தல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இரவு வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பவானி அம்மன், ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ முருகன், ஆகிய தெய்வங்களுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கைலாய வாத்தியங்கள் முழங்க கோயில் உட்பிரகாரம் வலம் வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்ட இரவு வீதி உலா வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

What do you think?

தென்பசியார் ஸ்ரீ பவானி அம்மன் ஆலய கூழ் வார்த்தல் என்னும் சாகை வார்த்தல் திருவிழா

சேத்தியாத்தோப்பு கருப்புசாமி கோவிலில் 5001 பால்குட ஊர்வலம்