in

திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலத்தில் பெண் பக்தர்கள் ஜால்ரா மற்றும் கோலாட்டத்துடன் நடனமாடி கிரிவலம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலத்தில் பெண் பக்தர்கள் ஜால்ரா மற்றும் கோலாட்டத்துடன் நடனமாடி கிரிவலம்

 

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் ஜால்ரா மற்றும் கோலாட்டத்துடன் நடனமாடி கிரிவலம்.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருத்தலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆந்திரா மற்றும் தெலுங்கானா பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டு வந்த நிலையில்

ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த அன்னமாய் மாவட்டம் ரயில்வே கோடு ஊரைச் சேர்ந்த வெங்கமாம்பா நடன குழுவை சேர்ந்த 22 பெண்கள் உள்ளிட்ட பலர் அண்ணாமலையார் மீது மிகுந்த பக்தியுடன் தெலுங்கு பக்தி பாடலுக்கு ராஜகோபுரத்தில் தொடங்கி உலக பிரசித்தி பெற்ற 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவல பாதையில் கோலாட்டம் போட்டுக் கொண்டு கிரிவலம் வந்தார்கள் .

கடந்த எட்டு ஆண்டுகளாக ஆந்திராவில் இருக்கும் அனைத்து கோவில்களிலும் இதுபோன்று கடவுள் மீது கொண்ட பக்தியால் இந்த குழுவினர் பக்தியாக நடனமாடி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் . குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவத்தின் போது இந்த குழுவினர் நடனம் ஆடுவது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலையில் தற்போது இவர்கள் முதல்முறையாக அண்ணாமலையார் மீது கொண்ட பக்தியால் பக்தி பாடலுக்கு ஏற்ப கோலாட்டம் ஆடி கிரிவலம் வந்தார்கள்.

திருவண்ணாமலைதேரடி வீதியில் உள்ள ராஜகோபுரம் முன்பு துவங்கிய இந்த நடன குழுவினரின் பக்தி நடனம் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவலம் பாதை முழுவதும் நடனம் ஆடி விடியற்காலை அண்ணாமலையார் ஆலயம் வந்து அடைவார்கள் என்று கூறப்படுகிறது.

What do you think?

கழனிவாசல் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மோகனூர் பெருமாள் ஆலயத்தில் ஆடிமாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கருட சேவை