தமிழ் திரையுலகிலும் கமிஷன்….னா உதறலில் தமிழ் நடிகர்கள்
கடந்த ஒரு வார காலமாக சினிமா திரையுலகில் ஹேமா கமிஷனால் புயல் வீசிக் கொண்டிருக்க முன்னணி நடிகையை நடிகர் திலீப் கடத்தி சென்று அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவத்துக்கு பிறகு அமைக்கப்பட்டது தான் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா அவர்களை வைத்து உருவாக்கிய ஹேமா கமிஷன்.
இவர் தலைமையில் மலையாள திரை உலகில் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடுமைகளையும் அநீதிகளையும் இந்த கமிஷன் ஆராய்ந்து ஒரு அறிக்கையை தற்போது தாக்கல் செய்துள்ளது.
இந்த கமிஷன் வெளியானதிலிருந்து மலையாள நடிகர்கள் மட்டுமல்ல தமிழ் நடிகர்களுக்கும் உதறல் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் முன்னெச்சரிக்கையாக விஷால் இன்று தனது 47வது பிறந்த நாளை முதியோர் இல்லதில் கொண்டாடிவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்து வெளியிட்டதாவது.
பெண்களிடம் யாராவது தகாத முறையில் நடக்க முற்பட்டால் காலில் இருப்பதை எடுத்து தைரியமாக அடியுங்கள். தமிழ் திரையுலகில் பெண்களுக்கு மரியாதை கொடுக்கபடும் அவர்களுக்கு எதிராக நடக்கப்படும் குற்றங்கலை தடுக்க விரைவில் 10 பேர் கொண்ட கமிஷன் அமைக்கப்படும் அதற்கான வேலைகள் தற்போது போய்க்கொண்டிருப்பதாக விரைவில் அறிவிப்பை நான் வெளியிடுவேன் என்று நடிகர் சங்க தலைவர் விஷால் கூறியுள்ளார்.
இந்த கமிஷனுக்கு பிறகு தமிழ் துறையுயிலும் பல நடிகர்கள் மாட்டுவார்கள் என்று ப்ளூ சட்டை மாறன் Hint கொடுத்துள்ளார்.