காதலை அறிவித்த தமிழும் சரஸ்வதியும் சங்கீதா சாய்
கோடம்பாக்கமே அடுத்தடுத்த திருமண கொண்டாட்டங்களால் கலை கட்டுது மீண்டும் ஒரு ரியல் ஜோடி ரில் ஜோடி ஆகப் Promote ஆகி இருக்கிறார்கள்.
விஜய் டிவியில் தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் சங்கீதா சாய் இவரும் அய்யனார் துணை சீரியலில் நடித்த அரவிந்த் சேஜு காதலிப்பதாக புத்தாண்டு தினத்தன்று ரசிகர்களுக்கு தங்கள் காதலை அறிவித்து ஹேப்பி நியூஸ் கொடுத்திருக்கின்றனர்.
மதுரையை சேர்ந்த சங்கீதா பட்டப்படிப்பு முடித்தவுடன் சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்தார். தன்னுடைய தோழி ஒருவர் சன் மியூசிக்கில் விஜேவாக இருப்பதை பார்த்து இவரும் ஆடிஷனில் கலந்து கொண்டு செலக்ட் ஆனவர் ஐடியில் வேலை செய்து கொண்டு 5 வருடம் விஜேவாக பணிபுரிந்தார்.
அதன் பிறகு சீரியலுக்காக வாய்ப்பு தேடியவர் சன் டிவியில் ரேவதியின் இயக்கத்தில் வெளிவந்த அழகு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதன் பிறகு தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்தார். அரவிந்த் பல Youtube தொடர்களில் நடித்தவர் அய்யனார் துணை சீரியலில் சோழன் என்ற கதாபாத்தில் நடித்து வருகிறார்.
இந்த ஜோடிகள் இருவரும் விதவிதமாக புகைப்படத்தை எடுத்து தங்கள் காதலை அறிவித்து ரசிகர்களுக்கு New Year Treat கொடுத்துள்ளனர்.
விரைவில் இவர்கள் திருமணம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.