in

நூதன முறையில் வாக்கு சேகரித்த நாம் தமிழர் வேட்பாளர்


Watch – YouTube Click

நூதன முறையில் வாக்கு சேகரித்த நாம் தமிழர் வேட்பாளர்

 

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் வேட்பாளர்கள் நூதன முறையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகா தினந்தோறும் பொதுமக்களை எளிதாக கவரும் வகையிலான நூதன பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி புகழ்பெற்ற நூற்றாண்டு பழமை பெற்ற பரவை காய்கறி சந்தையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அங்கு காய்கறி வியாபாரிகளிடம் குறைகளை கேட்டு அறிந்து அவர்களுடன் சேர்ந்து காய்கறி மற்றும் நிலக்கடலை விற்பனை செய்து டீக்கடையில் டீ அருந்தி நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

தொடர்ந்து கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி விவசாயமும் மீன்பிடித் தொழிலும் சார்ந்துள்ள பகுதி என்பதால் இப்பகுதியில் துறைமுக வளர்ச்சி விவசாயிகளுக்கான காப்பீடு திட்டங்கள் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் காய்கறிகளை சேமித்து வைக்க குளிர் பதன கிடங்கு மற்றும் மாம்பழ ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியவை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக அப்பகுதி மக்களிடம் வாக்குறுதி அளித்தார்.

இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியில் நாகை மண்டல செயலாளர் அகஸ்டின் அற்புதராஜ் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் பழனிவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Watch – YouTube Click

What do you think?

வத்திராயிருப்பு அருகே தனியார் பஸ்கள் மோதல்

போதை பொருள் மூலமாக திமுகவுக்கு வந்த செருக்கை ஓட்டு மூலமாக நொறுக்க வேண்டும்